பைபாஸ் ஆபரேஷன்: ஆள் அனுப்பி ராமதாஸ் உடல் நிலையை விசாரித்த கருணாநிதி

பாமக நிறுவனர் ராமதாஸுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து கடந்த வாரம் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். இதையடுத்து கடந்த 20ம் தேதி அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு அவர் தற்போது நலமாக உள்ளார். அவரை அவரது மகன் அன்புமணி ராமதாஸ் குடும்பத்தினர் மருத்துவமனையில் இருந்து கவனித்துக் கொள்கின்றனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருக்கும் ராமதாஸை பார்க்க பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் ராமதாஸின் உடல் நிலை குறித்து அறிந்து வருமாறு திமுக தலைவர் கருணாநிதி டிகேஎஸ் இளங்கோவன் எம்.பி.யை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ராமதாஸை சந்திக்க மருத்துவர்கள் அனுமதிக்காததால் இளங்கோவன் அன்புமணியிடம் அவரது தந்தையின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
இளங்கோவன் அன்புமணியிடம் சுமார் 15 நிமிடங்கள் பேசிவிட்டு சென்றார். அதன் பிறகு அவர் கருணாநிதியை சந்தித்து ராமதாஸின் உடல் நிலை குறித்த விவரங்களை தெரிவித்தார்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து












Click it and Unblock the Notifications