இலங்கை தமிழர்களுக்கு அதிக நன்மைகளை செய்தது காங்கிரஸ் தான்: திருநாவுக்கரசர்
புதுக்கோட்டை: இலங்கைப் பிரச்சனையை மையமாக வைத்து தமிழகத்தில் பொது அமைதியை குலைக்க நினைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர் கூறியதாவது:
இலங்கை தமிழர் பிரச்சனையில் காங்கிரசின் செல்வாக்கை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சிலர் திட்டமிட்டு பிரசாரம் செய்கிறார்கள். இலங்கையில் போர் குற்றம் புரிந்த அதிபர் ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. அதேசமயம் அதனை காரணமாக வைத்து கொண்டு தமிழ்நாட்டில் பொது அமைதிக்கு ஊறு விளைவிக்க முயல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை போரில் எஞ்சிய தமிழர்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ வேண்டும் என்பதே காங்கிரசின் நிலைபாடு. அதற்காக பல ஆயிரம் கோடி ரூபாய் வரை மத்திய அரசு இலங்கைக்கு நிதி உதவி அளித்துள்ளது.
இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர்களை விட இலங்கை தமிழர்களுக்கு அதிக நன்மைகளை செய்தது காங்கிரஸ் தான். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக யார் பிரசாரம் மேற்கொண்டாலும் அதனை உரிய முறையில் கட்சி எதிர் கொள்ளும்.
மீண்டும் காங்கிரஸ் ஆட்சி
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. 2 ஆண்டு கால ஆட்சியில் பல நிறைகளும், சில குறைகளும் உள்ளன. பாஜக கூட்டணியில் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதை அதன் கூட்டணி கட்சிகளே ஒத்துக்கொள்ளவில்லை. தேர்தல் அறிவிப்பு வந்த பிறகுதான் கூட்டணிகள் முடிவாகும். ஊழல் குற்றசாற்றுகளால் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட போவதில்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைவது உறுதி. பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் எந்த குழப்பமும் இல்லை என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications