முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக ராமதாஸ்- குரு மீது வழக்கு: விசாரணைக்கு ஏற்பு
அரியலூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் வன்னியர் சங்கத்தலைவர் காடுவெட்டி குரு அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அரியலூர் மாவட்ட தலைமை குற்றவியல் அரசு வழக்கறிஞர் சண்முகம் அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி உத்திராபதியிடம் புகார் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
கடந்த 7.2.2013 அன்று இரவு அரியலூரில் உள்ள காமராஜ் திடலில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ம.க . நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசினார் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரணைக்காக நீதிபதி உத்திராபதி ஏற்றுக்கொண்டார்.
இதேபோன்று வழக்கறிஞர் சண்முகம் மற்றொரு மனுவை நீதிபதி உத்திராபதியிடம் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கீழ குடியிருப்பு பகுதியில் கடந்த 7.2.13 அன்று வன்னியர் சங்க பட்டதாரி இளைஞர் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய வன்னியர் சங்க மாநில தலைவரான காடுவெட்டி குரு தமிழக முதல்வரை அவதூறாக பேசியதாக குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் அதே நாளில் அரியலூரில் நடைபெற்ற பா.ம.க. பொதுக்கூட்டத்திலும் வன்னியர் சங்க மாநில தலைவர் காடுவெட்டி குரு கலந்து கொண்டு முதல்வரை அவதூறாக பேசியதாகவும் தெரிவித்துள்ளார். காடுவெட்டி குரு மீதான 2 மனுக்களையும் விசாரணைக்கு நீதிபதி உத்திராபதி இன்று ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications