பெங்களூர் குண்டு வெடிப்பு: கிச்சன் புகாரி கூட்டாளிகள் நெல்லையில் பதுங்கல்?
நெல்லை: பெங்களூரு குண்டு வெடிப்பில் தொடர்புடைய கிச்சான் புகாரியின் கூட்டாளிகள் நெல்லையில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கர்நாடக போலீசார் நெல்லையில் முகாமிட்டுள்ளனர்.
பெங்களூரு மல்லேஸ்வரம் பாஜக அலுவலகம் அருகே கடந்த 17ம் தேதி நடந்த குண்டு வெடிப்பில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். விசாரணையில் குண்டு வெடிப்புக்கு தீவிரவாதிகள் பயன்படுத்திய பைக் தமிழகத்தை சேர்ந்தது என தெரிய வந்தது. இதையடுத்து தமிழக, கர்நாடக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். முதல்கட்டமாக பைக்கை வாங்கிய பெருங்களத்தூரை சேர்ந்த பிரகாஷ் என்பவரிடம் விசாரணை நடந்தது. அவர் பைக்கை காஞ்சிபுரத்தை சேர்ந்த மெக்கானிக் முருகனிடம் விற்றதாக தெரிவித்தார்.
முருகனிடம் விசாரித்த போது வேறொரு மெக்கானிக் அன்வர் பாஷாவிடம் விற்றது தெரிய வந்தது. அவரிடம் தீவிரவாதிகள் போலி ஆவணங்கள் கொடுத்து பைக்கை வாங்கி சென்று அதில் வெடிகுண்டை பொருத்தி நாசவேலைக்கு பயன்படுத்தியுள்ளனர்.
குண்டு வெடிப்பில் கேரள தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வரவே எஸ்பி அருளரசு தலைமையிலான தனிப்படையினர் அங்கு சென்று 4 பேரை கைது செய்தனர். பைப் வெடிகுண்டை இவர்கள் தான் தயாரித்துள்ளனர். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நெல்லையை சேர்ந்த கிச்சான் புகாரி, முகமது ஷாலி, பீர் முகமது, பஷீர் மற்றும் ரசூல் மைதீன், சலீம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் பெங்களுரு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிச்சான் புகாரியின் கூட்டாளிகள் நெல்லையில் பதுங்கியிருக்கும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. குண்டு வெடிப்பில் இவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதால் பெங்களுரு போலீசார் நெல்லையில் முகாமிட்டுள்ளனர். குறிப்பாக போலீஸ் பக்ரூதின் என்பவர் இங்கு பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இவர்களை பிடிக்க தமிழக, கர்நாடக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications