குருநாத் கோரிய கால அவகாசம் நிராகரிப்பு- இன்று ஆஜர் இல்லை எனில் அரெஸ்ட் வாரண்ட்தான்!

ஐபிஎல் பிக்ஸிங் விவகாரத்தில் போலீசாரின் தேடுதல் வேட்டை நாட்டின் பல நகரங்களிலும் விரிவடைந்திருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் நேற்று பல தரகர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னையில் தேடப்பட்ட கிட்டி என்பவர் போலீசிடம் சரணடைந்திருக்கிறார். இந்நிலையில் பிக்ஸிங் விவகாரத்தில் ஐபிஎல் அணிகளில் முக்கிய அணியான சென்னை சூப்பார் கிங்ஸ் அணியே சிக்கி இருப்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் கைது செய்யப்பட்ட பாலிவுட் நடிகர் வின்து தாராசிங்குடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்தவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரியும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சீனிவாசனின் மருமகனுமான குருநாத் மெய்யப்பன் என்ற தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து மும்பை போலீசார் 4 பேர் நேற்று சென்னை வந்தனர். சென்னை செனடாப் சாலையில் உள்ள குருநாத் வீட்டுக்குப் போய் விசாரணை நடத்தினர். ஆனால் குருநாத் வீட்டில் இல்லை. இதனால் அவர் உடனடியாக ஆஜராக வேண்டும் என்று அவரது உதவியாளரிடம் சம்மன் கொடுத்துவிட்டு சென்னையிலே அவர்கள் முகாமிட்டுள்ளனர். இந்த நிலையில் தாம் ஆஜராவதற்கு கால அவகாசம் வேண்டும் என்று மும்பை போலீசாரிடம் குருநாத் மெய்யப்பன் கோரியிருந்தார்.
குருநாத்தின் இந்த கோரிக்கையை நிராகரித்த மும்பை போலீசார் இன்று ஆஜராக வேண்டும் என்று கண்டிப்புடன் கூறியுள்ளனர். குருநாத் தற்போது எங்கு உள்ளார் எனத் தெரியவில்லை. அவரது மாமனார் சீனிவாசன் தற்போது கொடைக்கானலில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அவருடன் குருநாத் இருக்கக் கூடும் என்று சில தகவல்கள் தெரிவிக்கவில்லை. இருப்பினும் இன்று குருநாத் ஆஜராகவில்லை எனில் அவரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது.
-
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!











Click it and Unblock the Notifications