பாஜக ஆளும் மாநிலத்தில்தான் ரேப் அதிகமாம் சொல்கிறார்: நடிகை (காங்கிரஸ்) நக்மா
போபால்: பாரதீய ஜனதா கட்சி ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறுகிறது என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நடிகை நக்மா குற்றம் சாட்டியுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் உறுப்பினரான நக்மா ம.பியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்தார். செய்தியாளர்களிடையே பேசிய அவர் கூறியதாவது.
2004 முதல் 2012ம் ஆண்டு காலகட்டத்தில் மொத்தம் 27,104 பாலியல் வன்கொடுமை குற்றங்கள் மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. தினசரி சராசரியாக 9 பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.

மாநிலத்தினை ஆளும் பாஜக அரசு இதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுத்தாக தெரியவில்லை.
மலைவாழ், பழங்குடியின பகுதியில் வசிக்கும் 37,000 பெண்கள் இந்த கால கட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 60 சதவிகித பெண் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளனர். 73 சதவிகித பெண்கள் ரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் மாநில அரசு காகித அளவிலேயே பெண்களின் பாதுகாப்பிற்காக திட்டங்களை அறிவிக்கிறது என்று குற்றம் சாட்டினார் நக்மா.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்











Click it and Unblock the Notifications