2005 ஆம் ஆண்டு முதல் மாவோயிஸ்டுகள் நடத்திய 10 அதிரடித் தாக்குதல்கள்!
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் காங்கிரஸ் மூத்த தலைவர் உட்பட 27 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பல அரசியல் தலைவர்களை கிலி கொள்ள வைத்திருக்கிறது.
மாவோயிஸ்டுகள் தங்களை வேட்டையாடும் பாதுகாப்புப் படையினரை இலக்கு வைத்து அதிரடித் தாக்குதல்களை நடத்தினாலும் அவ்வப்போது அரசியல் தலைவர்களும் மாவோயிஸ்டுகளின் மொழியில் 'அழித்தொழிக்கப்படுவது' உண்டு.. ஆனால் தற்போதுதான் முதல் முறையாக காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது பெரும்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 2005ஆம் ஆண்டு முதல் இதுவரையில் மாவோயிஸ்டுகள் நடத்திய 10 முக்கிய தாக்குதல்களைப் பார்க்கலாம்

2005ல்...
2005ஆம் ஆண்டு நவம்பர் 13-ந் தேதி பீகாரின் ஜெகன்பாத் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான மாவோயிஸ்டுகள் ஒன்று திரண்டு போலீசார் மீது பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தினர்.

2006ல் ...
2006ஆம் ஆண்டு பிப்ரவரி 9-ந் தேதியன்று சத்தீஸ்கர் மாநிலம் ஜகதல்பூர் அருகே பைலடியா என்ற கிராமத்தில் தேசிய சுரங்க அபிவிருத்தி கழகம் மீது தாக்குதல் நடத்தி வெடிமருந்துகளை எடுத்துச் சென்றனர் மாவோயிஸ்டுகள். இதில் 8 சிஐஎஸ்எப் படையினரை மாவோயிஸ்டுகள் பலியாகினர்.

2007ல் ஜார்க்கண்ட்டில்
2007 ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜாம்ஷெட்பூர் அருகே கால்பந்து போட்டியை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் எம்.பி. சுனில்குமார் மகாதோவை மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றனர். சுனில்குமாருடன் அவரது பாதுகாவலர்கள் இருவர் பலியாகினர்.

2007ல் ஜனார்த்தன ரெட்டியை இலக்கு வைத்து..
2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 7ந்- தேதி மாவோயிஸ்டுகள் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் நடத்திய தாக்குதலில் அம்மாநில முன்னாள் முதல்வர் என். ஜனார்த்தன் ரெட்டி மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி ஆகியோர் உயிர் த்ப்பினர். இதில் 3 காங்கிரஸ் தொண்டர்கள் கொல்லப்பட்டனர்.

2008ல்..
பீகாரின் ரோடாஸ் மாவட்டத்தில் ஷாசரம் என்ற இடத்தில் காவல் நிலையம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். இதில் 9 போலீசார் கொல்லப்பட்டனர்.

2009ல் மகாராஷ்டிராவில்..
2009ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டம் லகேரி காவல் நிலையம் மீது தாக்குதல் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியதில் 17 போலீசார் பலியாகினர்.

2009ல் பாஜக எம்.பி சுட்டுக் கொலை
2009 ஆம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலம் ஜகதல்பூர் அருகே பைரகுடா என்ற கிராமத்தில் பாஜக எம்.பி. பலிராம் காஷ்யப்பும் அவரது மகன்களும் மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

2009-ல் ஒடிஷாவில்...
2009ஆம் ஆண்டு ஒடிஷா மாநிலம் கோராபுட் பாக்சைட் சுரங்கம் ஒன்றின் மீதான மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் 10 துணை ராணுவப் படையினர் கொல்லப்பட்டனர்.

2010-ல் 75 பேர் பலி
2010அம் ஆண்டு சத்தீஸ்கரின் தண்டேவடா மாவட்டம் முக்ரனா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடத்திய உக்கிரத் தாக்குதலில் 75 சி.ஆர்.பி.எப். படையினரும் போலீசாரும் கொல்லப்பட்டனர்.

2010-ல் காங்கிரஸ் தலைவர் வீட்டில் தாக்குதல்
2010அம் ஆண்டு சத்தீஸ்கரின் தண்டேவடா மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவர் அவ்தேஷ் கெளதம் வீட்டில் தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகள் அவரது உறவினர்கள் இருவரை சுட்டுக் கொன்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications