ஜெகன் ஜெயிலுக்குப் போய் ஒரு வருஷமாச்சு

கடந்த ஆண்டு மே 27-ந் தேதியன்று வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார் என்ற வழக்கில் ஜெகன் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் இந்த வழக்கில் விசாரணை முடியவில்லை என்று சிபிஐ தொடர்ந்தும் கூறி வந்த நிலையில் அவருக்கான ஜாமீனும் மறுக்கப்பட்டே வந்தது. உச்சநீதிமன்றத்தின் கதவை கடைசியாகத் தட்டிப் பார்த்தார். அங்கும் சிபிஐ அதே பல்லவியைப் பாட விசாரணைக்கு குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயித்ததுடன் ஜெகனின் மனுவையும் தள்ளுபடி செய்துவிட்டது. சிபிஐ விசாரணை முடிந்த பின்னர் விசாரணை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரலாம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இன்றுடன் ஜெகன் சிறையில் அடைக்கப்பட்டு ஓராண்டாகிவிட்டது. ஓராண்டு ஜெகன் சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து அவர் கைது செய்யபட்ட இன்று முதல் இரண்டு நாள் தொடர் போராட்டங்களை நடத்தப் போவதாக ஒய்.எஸ்.ஆர். கட்சி அறிவித்தது. மாநிலம் முழுவதும் மெழுகுவர்த்தி தீபம் ஏற்றும் போராட்டத்தை நடத்தப் போவதாகவும் அறிவித்தது. ஆளும் காங்கிரஸ் மற்றும் தெலுங்குதேசம் கட்சிகள் இரண்டுமே ஜெகன் மோகனுக்கு எதிராக சதி செய்தே சிறைக்குள் அடைத்து வைத்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications