காவிரி நீரை திறக்காத கொடுக்காத அரசு ரூ2480 கோடி நட்ட ஈடு வழங்கக் கோரி தமிழகம் வழக்கு!

கடந்த ஆண்டு கர்நாடகாவில் உள்ள காவிரி அணைகளில் தண்ணீர் அதிக அளவில் இருப்பு இருந்தது. ஆனால் பெரும் போராட்டம் நடத்திப் பார்த்தும் கர்நாடகா தண்ணீரை திறந்துவிடவில்லை. இதனால் தமிழக டெல்டா பகுதியில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போது கர்நாடக அரசு மீது வழக்கு தொடரப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இதன்படி இப்போது தமிழக அரசு கர்நாடகா மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மே 9-ந் தேதியன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், காவிரி தீர்ப்பாயம் உத்தரவின்படி 2012-13 ஆண்டில் கர்நாடகா தண்ணீர் திறந்து விடாததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் மின் உற்பத்தி மற்றும் விவசாய சார்பு பொருட்கள் உற்பத்தி ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு இழப்பீடாக ரூ. 1045 கோடியே 70 லட்சம் கர்நாடகா தர உத்தரவிடவேண்டும். மேலும் தீர்ப்பாயம் 2012-13-ம் ஆண்டில் 58.18 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டும் அதை வழங்காததால் அதற்கு ரூ. 1434 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் மொத்தம் ரூ. 2480 கோடி கர்நாடக அரசு நட்ட ஈடு தரவேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு காவிரியில் போதிய தண்ணீர் விடாததால் உணவு உற்பத்தியில் ரூ. 685 கோடியே 80 லட்சமும், மின் உற்பத்தியில் ரூ. 268 கோடியே 50 லட்சமும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு கணக்கிட்டுள்ளது. காவிரி பாசனம் மூலம் 14 லட்சத்து 93 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் நடைபெறும். போதிய தண்ணீர் இல்லாததால் 3 லட்சம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் நிறுத்தப்பட்டதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications