கள்ளக்காதல், கள்ளத்தொடர்பு கொலை: ச்ச்சீ சீ இது நம்ம மதுரை தானா?- வியக்கும் மக்கள்
மதுரை: மதுரையில் அதிகரித்து வரும் கலாச்சார சீரழிவுக் கொலைகள் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கோவில் நகரமான மதுரையில் நேற்று நள்ளிரவில் 3 இடங்களில் கொலைகள் நடந்துள்ளன. திருநகர், சமயநல்லூர் மற்றும் சோழவந்தான் அருகே உள்ள தனிச்சியம் ஆகிய இடங்களில் தான் இந்த 3 கொலைகள் நடந்துள்ளன. கள்ளக் காதல் கொலை, கள்ளத் தொடர்பு வைத்திருந்ததால் தங்கை கணவரை கொலை செய்த அண்ணன் மற்றும் மருமகளை மாமனாரே வெட்டிக் கொலை என்ற காரணங்கள் மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சோழவந்தான் அருகே உள்ள அய்யங்கோட்டையில் கல்லூரி மாணவர் சுப்பிரமணி(19) தனது மைத்துனரால் கொல்லப்பட்டு வீட்டிற்குள்ளேயே புதைக்கப்பட்டார். அவரை கொலை செய்த குற்றத்திற்காக ஆறுமுகம் என்ற ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர். கடந்த 2 நாட்களில் மட்டும் மதுரை நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடும்பத் தகராறால் 6 பேர் கொலை செய்யப்பட்டனர்.
கடந்த மாதம் மதுரை மாடக்குளத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி கைது செய்யப்பட்டார். கலாச்சார பின்னணி கொண்ட மதுரையில் குடும்ப சீர்கேட்டால் கொலைகள் நடப்பது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த கலாச்சார சீர்கேட்டை தடுக்க சமூக ஆர்வலர்கள் மற்றும் கலாச்சாரத்தை கற்றுக் கொடுக்கும் ஆர்வலர்கள் முயற்சி செய்ய வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications