பாமகவின் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரி திருமாவளவன் மனு!

மேலும் தருமபுரி, மரக்காணம் கலவரச் சம்பவங்களில் கைது செய்யப்பட்ட பாமகவினர் மீது 'தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்ட'த்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத் தலைவர் பி.எல். புனியாவையும் அவர் நேரில் சந்தித்து மனு அளித்தார்.
இது தொடர்பாக, திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தருமபுரியில் தாழ்த்தப்பட்டோர் வசித்த பகுதிகளில் பாமகவினர் வன்முறையில் ஈடுபட்டது; கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வசித்து வந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் மீது பாமகவினர் தாக்குதல் நடத்தியது குறித்து மனித உரிமை ஆணையத்தில் அளித்த மனுவில் விளக்கியுள்ளேன்.
'மக்கள் தொலைக்காட்சி'யில் பல்வேறு சமுதாயத்தினரிடையே பிரிவினையைத் தூண்டும் கருத்துகளை அக்கட்சி தலைவர்கள் பேசி வருகின்றனர். அத்தொலைக்காட்சி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனித உரிமை ஆணையத்தைக் கேட்டுக் கொண்டேன்.
இது தொடர்பாக, தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத் தலைவர் பி.எல். புனியாவிடமும் மனு அளித்துள்ளேன். இந்த விவகாரம் குறித்து குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் இந்திய பத்திரிகை கவுன்சிலிடமும் புகார் அளிக்கவுள்ளேன்," என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications