முதன் முறையாக மூளைச்சாவு அடைந்தவரின் முகமும் தானம் : போலந்து டாக்டர்கள் உலக சாதனை
வார்சா: கல் உடைக்கும் மெஷினில் சிக்கி முகம் சிதைந்து உயிருக்கு போராடிய தொழிலாளிக்கு முக மாற்று ஆபரேஷனை செய்து போலந்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
அழகான முகம் வேண்டும் என்பதற்காக முக மாற்று ஆப்ரேஷன் செய்து கொண்டவர்களைப் பற்றி கேள்விப் பட்டிருப்போம். ஆனால் முதல் முறையாக உயிர் காக்கும் சிகிச்சையாக நடைபெற்ற முக மாற்று ஆபரேஷனைப் பற்றித் தெரியுமா?
போலந்து நாட்டின் ரஸ்லா பகுதியை சேர்ந்த கிரஸ்கோர்ஸ் (33) எனும் கல் உடைக்கும் தொழிலாளி, ஆலையில் வேலை செய்யும் போது விபத்தில் சிக்கி முகத்தை இழந்தார். அவருக்கு ஆபரேஷன் மூலம் மீண்டும் முகத்தை உருவாக்கி தந்துள்ளனர் போலந்து டாக்டர்கள்.

விபத்தில் சிக்கிய கிரஸ்...
கடந்த ஏப்ரல் 23&ம் தேதி மெஷின் உதவியுடன் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் கிரஸ். அப்போது எதிர்பாராதவிதமாக கை நழுவியதில் மெஷின் அவரை நோக்கி பாய்ந்து, டிரில்லிங் செய்துகொண்டிருந்த கூரிய முனைகள் அவரது முகத்தை குத்தி கிழித்தன. இதில் மூக்கு, பல், தாடை பகுதி நொறுங்கி, சின்னாபின்னமானது கிரிஸ் முகம்.

முகத்தை இழந்தார்...
உடனடியாக ரஸ்லாவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட கிரிஸ்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. முகத்தின் தோல் பகுதிகள் முழுவதுமாக சேதம் அடைந்திருந்ததால், முதலில் டாக்டர்களால் பார்வையை மட்டுமே காப்பாற்றித் தர முடிந்தது.

சதை அழுக ஆரம்பித்தது...
முகத்தில் உள்ள சதை அழுகத் தொடங்கியதால்,நோய்த் தொற்று அதிகமானது. இது உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்த டாக்டர்கள், உடனடியாக க்ளிவைஸ் நகரில் உள்ள கேன்சர் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை மையத்துக்கு கிரஸ்ஸை கொண்டு சென்றனர்.

முகமாற்று ஆபரேஷன்...
அங்கு,வேறொருவரின் முக தோலை பொருத்தி முக மாற்று ஆபரேஷன் செய்தால் மட்டுமே அவரை பிழைக்க வைக்க முடியும் என்ற நிலை உருவானது. அந்த நேரத்தில், விபத்தில் சிக்கிய 30 வயது வாலிபர் ஒருவர் மூளைச்சாவு அடைந்தார்.

தானம் கிடைத்த ‘முகம்’...
அவரது இதயம், கல்லீரலை போலவே ‘முகம்' தானம் அளிக்கவும் உறவினர்கள் ஒப்புக்கொண்டனர். கடந்த 15&ம் தேதி தொடங்கிய ஆபரேஷனில், முதலில் எலும்புகளை சீரமைத்த பிறகு, ‘புதிய முகத்தை' ஒரு போர்வை போல கிரஸ்கோர்சின் முகத்தில் டாக்டர்கள் பொருத்தி தையல் போட்டனர். 27 மணி நேரம் இந்த ஆபரேஷன் நடை பெற்றது.

சாதனை முயற்சி...
ஆபரேஷன் டீம் தலைவர் ஆடம் மேசிஜெஸ்கி ஆபரேஷன் வெற்றி பற்றி கூறும்போழுது, "பிரான்சில்தான் முதல்முறையாக முகம் மாற்று ஆபரேஷன் 2005&ல் செய்யப்பட்டது. அதன் பிறகு பெல்ஜியம், ஸ்பெயின், துருக்கி, அமெரிக்கா என பல நாடுகளிலும் 20 ஆபரேஷன்கள் செய்யப்பட்டுள்ளன. ஒருவரது முகத்தை மாற்ற முடிவு செய்த பிறகு, பல வாரங்கள் அல்லது மாதக்கணக்கில் காத்திருந்தே இந்த ஆபரேஷன் செய்யப்படுவது வழக்கம்.

வெற்றி.... வெற்றி....
ஆனால் உயிர் காக்கும் சிகிச்சையாக, விபத்து நடந்த மூன்றே வாரத்தில் முகத்தை மாற்றியது உலக சாதனை. அதிலும் போலந்தில் முகம் மாற்று ஆபரேஷன் இது முதல்முறை. ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்துள்ளது.தற்போது வென்டிலேட்டர் உதவியில்லாமல் தானாக மூச்சு விடுகிறார். தலை, கையை அசைக்கிறார். 8 மாதத்தில் அவரது புதிய முகம் முழு இயக்கமும் பெற்றுவிடும்."என மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications