90% கேன் குடிநீர் குடிக்க லாயக்கில்லாதது: இந்திய நுகர்வோர் சங்க தலைவர் எச்சரிக்கை

இந்திய நுகர்வோர் சங்கத்தின் சார்பில் பாதுகாப்பான குடிநீர் குறித்த பயிற்சி நிறைவு விழா நேற்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட சங்க தலைவர் ஆர். தேசிகன் பேசியதாவது,
இந்தியாவில் நுகர்வோர் தொடர்பான சட்டங்கள் இருந்தும் அவை முறையாக அமல்படுத்தப்படாமல் உள்ளது. சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அந்த கடமையில் இருந்து அரசு தவறினால் நாம் வழக்கு போடலாம். எந்த குடிநீரையும் நன்கு காய்ச்சி, ஆற வைத்த பிறகே பருக வேண்டும்.
சிறிய பாட்டில்களில் குடிநீர் வாங்கினால் நீரை குடித்துவிட்டு பாட்டிலை நொறுக்கி எறிந்துவிட வேண்டும். அதை மீண்டும் பயன்படுத்தினால் உடல் நலத்திற்கு கேடு. கேன் குடிநீர் பயன்படுத்துவதை நாம் பெருமையாக நினைக்கிறோம். ஆனால் 10 கேன் குடிநீர் நிறுவனங்களின் மாதிரிகளை ஆய்வு செய்ததில் 9 மாதிரிகள் குடிக்க உகந்ததில்லை என்று தெரிய வந்துள்ளது என்றார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சென்னை, ஈரோடு, காஞ்சிபுரம், வேலூர், திருச்சி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட 1122 குடிநீர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் 44 சதவீத மாதிரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக டிடிஎஸ்(Total Dissolved Solids) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனை ஆகியவற்றில் கிடைக்கும் குடிநீரில் டிடிஎஸ் அனுமதிக்கப்பட்ட அளவே இருந்தாலும் அவற்றில் பாக்டீரியாக்களின் தாக்கம் அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மாதிரிகளை பரிசோதனை செய்தவர்கள் மற்றும் பயிற்சியில் கலந்து கொண்ட 782 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications