இந்தியாவின் உதவியுடன் சீனாவை வளைக்கிறது ஜப்பான்.. பீதி கிளப்பும் சீன தினசரி!

இந்தியாவுடன் பல்வேறு வழியிலும் நெருங்கிய நட்பு கொண்டிருக்கும் நாடு ஜப்பான். இது சீனாவின் கண்களை உறுத்த ஆரம்பித்துள்ளது. மேலும் சமீபத்தில் ஜப்பான் பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் அங்கு பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். இது சீனாவை மேலும் டென்ஷனாக்கியுள்ளது.
இந்த நிலையில் சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தினசரி ஒன்று இந்தியாவையும், ஜப்பானையும் சேர்த்து அபாண்டமான செய்தி வெளியிட்டு வீம்பு செய்துள்ளது. அதாவது இந்தியாவின் உதவியுடன் சீனாவை வளைக்கப் பார்க்கிறது ஜப்பான் என்பதுதான் அந்த செய்தியாகும்.
இதுகுறித்து குளோபல் டைம்ஸ் என்ற அந்த இதழ் வெளியிட்டுள்ள தலையங்கத்தில், மன்மோகன் சிங்கின் நான்கு நாள் ஜப்பான் பயணம் இரு நாட்டு கடலோர பாதுகாப்பு ஒப்பந்தத்தையை முக்கிய குறிக்கோளாக கொண்டிருந்தது. இந்தியாவின் உதவியுடன் சீனாவை வளைக்கப் பார்க்கிறது ஜப்பான் என்றே தோன்றுகிறது.
சிங் வருகைக்கு முன்பு ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, மியான்மருக்கு விஜயம் செய்துள்ளார். இது சந்தேகத்தை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. சீனாவை சுற்றி வளைக்கும் முயற்சியே இது. சீனாவைச் சுற்றிலும் உள்ள நாடுகளை தன் பக்கம் இழுத்து சீனாவுக்கு நெருக்கடி தர ஜப்பான் முயலுகிறது.
ஆனால் இது நிச்சயம் நிறைவேறாது. அப்படிப்பட்ட நினைப்பு காணல் நீராகவே போகும். ஆசியாவில் சீனாவின் தாக்கத்தை தகர்க்கும் அளவுக்கு பலம் வாய்ந்த நாடு அல்ல ஜப்பான் என்று அந்த தலையங்கம் கூறுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications