சொல்லச் சொல்லக் கேட்காமல் கள்ளத்தனம்... மனைவியின் கள்ளக்காதலனை போட்டுத் தள்ளிய கணவர்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மனைவியின் கள்ளக்காதலனை வீட்டுக்கு வரவழைத்து அவரை உருட்டுக்கட்டையால் சரமாரியாக அடித்துக் கொலை செய்தார் கணவர்.
அத்திப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் 40 வயதான முருகன். இவரது மனைவி பெயர் பாஞ்சாலி. 35 வயதான இவருக்கும், தர்மபுரி மாவட்டம் ஆலங்குட்டை கிராமத்தைச் சேர்ந்த 36 வயது கண்ணாயிரத்திற்கும் இடையே கள்ளக்காதல் மூண்டது.
முருகனுக்கு மேல் செங்கம் அருகே உள்ள அயோத்திப்பட்டணத்தில் ஒருதோட்டம் உள்ளது. பக்கத்திலேயே கண்ணாயிரத்தின் தோட்டமும் உள்ளது. இதனால் இரு தரப்பும் நட்புடன் இருந்துள்ளனர்.
கண்ணாயிரத்தின் மனைவி இறந்து விட்டார். 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார் கண்ணாயிரம். இந்த நிலையில் முருகனின் மனைவிக்கும், கண்ணாயிரத்திற்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கள்ளக்காதலில் இறங்கினர்.
கடந்த நான்கு வருடங்களாக முருகன் இல்லாத நேரத்தில் இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதுமுருகனுக்குத் தெரிய வந்து அதிர்ந்தார். பின்னர் மனைவியைக் கண்டித்தார். ஆனால் பாஞ்சாலி கண்டுகொள்ளவில்லை.
இதனால் கொதிப்படைந்தார் முருகன். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு இரவில் கண்ணாயிரத்திற்குப் போன் செய்து, வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அதன்படி கண்ணாயிரமும் வந்தார். வந்த கண்ணாயிரத்தை முருகன் சரமாரியாக உருட்டுக்கட்டையால் அடித்து நொறுக்கி விட்டார். இதில் கண்ணாயிரம் உடனடியாக உயிரிழந்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் பாஞ்சாலி. இருப்பினும் கள்ளக்காதலன் செத்துப் போய் விட்டதால் கணவருடன் இணைந்து அவரும், முருகனும் சேர்ந்து கண்ணாயிரத்தின் உடலை ஒரு கிணற்றில் வீசி விட்டுத் திரும்பினர்.
ஆனால் கண்ணாயிரம் கானாமல் போனது தொடர்பாக புகார் வந்ததால் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது முருகனைக் கூப்பிட்டு விசாரித்ததில், உண்மையை ஒப்புக் கொண்டார் முருகன். இதையடுத்து அவரைப் போலீஸார் கைது செய்தனர். பாஞ்சாலி தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications