டைப்பிங் எரர்: தப்பான ஆளுக்கு மிஸ் யூனிவர்ஸ் கனடா பட்டம் சூட்டி பறிப்பு
ஒடாவா: 2013ம் ஆண்டுக்கான மிஸ் யூனிவர்ஸ் கனடா போட்டியில் டெனிஸ் காரிடோ என்பவர் வெற்றி பெற்றதாக கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. தவறுதலாக டெனிஸ் தான் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதாக மறுநாள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் ஒன்டாரியோ பிரான்ட்போர்ட் பகுதியைச் சேர்ந்தவர் டெனிஸ் காரிடோ(26). அவர் கடந்த 2008ம் ஆண்டில் மிஸ் எர்த் கனடா அழகிப் பட்டமும், 2010ம் ஆண்டில் மிஸ் வேர்ல்டு கனடா பட்டமும் வென்றார். இதையடுத்து மிஸ் யூனிவர்ஸ் கனடா அழகிப் பட்டம் வெல்வதை தனது லட்சியமாக வைத்திருந்தார்.
அதன்படி மிஸ் யூனிவர்ஸ் கனடா அழகிப் போட்டியில் கலந்து கொண்டார். இறுதிச் சுற்றுக்கும் தகுதி பெற்றார். கடந்த சனிக்கிழமை இறுதிச் சுற்று நடந்தது.

பட்டம் வென்ற டெனிஸ்
இறுதிச் சுற்றின் முடிவில் டெனிஸ் காரிடோ மிஸ் யுனிவர்ஸ் கனடாவாகத் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு கிரீடமும் அணிவிக்கப்பட்டது. தனது கனவு நிறைவேறிய சந்தோஷத்தில் திக்குமுக்காடிவிட்டார் டெனிஸ்

ஒரு நாள் அழகி
மறுநாள் மிஸ் யுனிவர்ஸ் கனடா போட்டியை நடத்திய டைரக்டர் டெனிஸிடம் மதிப்பெண்களை கூட்டி கம்ப்யூட்டரில் ஏற்றுகையில் தவறு ஏற்பட்டுவிட்டது என்றும், அவர் 4வது இடத்தை தான் பிடித்துள்ளார் என்றும் தெரிவித்தார். இதையடுத்து அன்றே பட்டத்தை திரும்பப் பெற்றனர்.

ரீசா சான்டோஸ்
டெனிஸிடம் இருந்து திரும்பப் பெறப்பட்ட பட்டம் உண்மையான வெற்றியாளர் ரீஸா சான்டோஸுக்கு(26) வழங்கப்பட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications