செவ்வாயில் குடியேறினால் புற்றுநோய் கன்பார்ம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில், மனிதர்கள் வசிப்பதற்கு வாய்ப்பில்லாத புற்றுநோயை உண்டாக்கும் கதிர்வீச்சு இருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே, நடை பெற்று வரும் ஆய்வுகள் மூலம் செவ்வாய் கிரகத்தில் ஆறுகளும், ஓடைகளும் இருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள என்டீவர் விண்கலத்தை நாசா அனுப்பியது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், செவ்வாயில் தரை இறங்கியது ‘எண்டீவர்'. செவ்வாய் கிரகத்தில் மேற்கொண்ட ஆய்வில், அங்கு பாறைகள் இருப்பதை உறுதி செய்தது. பூமிக்கு அனுப்பிய போட்டோக்களில் பாறைகள் மற்றும் மண் மாதிரிகள் காணப்பட்டன.

செவ்வாய் கிரகத்தில் நிலவும் தட்பவெப்பநிலை குறித்து, தற்போது ஆய்வு செய்து வருகிறது எண்டீவர். ஏற்கனவே, செவ்வாயில் தண்ணீர் இருப்பது செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

செவ்வாயில் காணப்படும் கூழாங்கற்கள்...

செவ்வாயில் காணப்படும் கூழாங்கற்கள்...

டென்னீஸ் பல்கலைக் கழகத்தின் பூமி மற்றும் கோள்கள் அறிவியல் துறை பேராசிரியர் லிண்டா ஹா தலைமையிலான விஞ்ஞானிகள் குழு என்டீவர் விண்கலம் வெட்டி எடுத்த பாறைகளை வைத்து மேற்கொண்ட ஆய்வில், அந்த பாறைகள் கூழாங்கற்களால் ஆனவையாக இருந்தன. அவற்றில் பெரும்பாலானவை உருண்டை வடிவத்தில் உள்ளதும் தெரிய வந்தது.

இயற்கையான கன்கிரீட்...

இயற்கையான கன்கிரீட்...

பாறைகள் ஒன்றோடொன்று ஒட்டி, கான்கிரீட் போன்று இறுகி கிடக்கின்றன. இந்த கூழாங்கற்கள் பாறைகள் மூலம் செவ்வாய் கிரகத்தில் ஆறுகள் மற்றும் ஓடைகள் இருந்ததற்கான ஆதாரம் கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இப்பாறைகள் செவ்வாய் கிரகத்தில் பல கிலோ மீட்டர் தூரம் பரவி இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

எதிர்கால இலக்கு...

எதிர்கால இலக்கு...

2030-ல் விஞ்ஞானிகளை அனுப்பி செவ்வாயில் ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவும், தனியார் நிறுவனம் ஒன்று சுற்றுலாப்பயணிகளையும் அனுப்ப திட்டமிட்டுள்ள வேளையில், விஞ்ஞானிகள் தெரிவித்துள்ள இத்தகவலால் செவ்வாயில் மனிதன் வாழ்வது சாத்தியமே இல்லை என்று தெரிய வந்துள்ளது.

கேன்சரை உண்டாக்கும் கதிர்வீச்சு...

கேன்சரை உண்டாக்கும் கதிர்வீச்சு...

50 சி.டி. ஸ்கேஸ் அளவுக்கு வெலிப்படும் கதிர்வீச்சால், புற்று நோய் உருவாகும் என கண்டறியப்பட்டுள்ளது. கடந்த எட்டரை மாதங்களாக செவ்வாயில் ஆய்வு மேற்கொண்டு வரும் எண்டீவர் விண்கலமும் கதிவீச்சுக்கு தப்பவில்லையாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+