வருமானத்தை குறைத்துக் காட்டி மோசடி: வோடபோன் நிறுவனத்துக்கு ரூ. 1,263 கோடி அபராதம்
டெல்லி: வருவாயைக் குறைத்துக் காட்டிய வோடபோன் மொபைல் நிறுவனத்துக்கு ரூ. 1,263 கோடி அபராதம் விதித்து மத்திய தொலைத் தொடர்புத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2008-09 மற்றும் 2010-11 ஆண்டுகளில் இந்த நிறுவனம் தான் ஈட்டிய வருவாயைக் குறைத்துக் காட்டி குறைவான வரியைக் கட்டியுள்ளது. இதையடுத்து 2008-09ம் ஆண்டுக்கு ரூ. 715 கோடியும், 2010-11ம் ஆண்டுக்கு ரூ. 548 கோடியும் அபராதம் விதித்துள்ளது தொலைத் தொடர்புத்துறை.

ஈட்டிய வருவாய், அன்னிய செலாவணி மூலம் கிடைத்த வருவாய், வட்டி மூலம் கிடைத்த வருவாய் ஆகியவற்றை இந்த நிறுவனம் குறைத்துக் காட்டியுள்ளது. இதையடுத்து 15 நாட்களில் ரூ. 1,263 கோடி அபராதத்தைக் கட்டுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த இந்த நிறுவனம் சைனா மொபைல் நிறுவனத்துக்கு அடுத்தபடியாக உலகின் 2வது மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாகும். voice data fone என்பதன் சுருக்கமே வோடபோன்.
இந்த நிறுவனத்தின் Zoozoo விளம்பரங்கள் உலகப் பிரசித்தி பெற்றவையாகும்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications