குடும்பத்துடன் விஷம் குடிக்க முயன்ற விவசாயி-கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
நெல்லை: சங்கரன்கோவில் அருகே தனது சொந்த நிலத்தில் பயிர் செய்ய விடாமல் உறவினர்கள் தடுப்பதாக கூறி விவசாயி விஷம் குடிக்க முயன்றார். இதனால் கலெகடர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சாயமலை தெற்கு தெருவை சேர்ந்தவர் சாமி. இவரது மனைவி சுந்தரம்மாள். சகோதரர் காளிபாண்டி, தாய் பஞ்சவர்ணம் சகோதரி மாலதி மற்றும் உறவினர்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார் பனவடலிசத்திரம் இன்ஸ்பெக்டர் தன்னை தொடர்ந்து மிரட்டுவதாக கூறி விஷம் குடிக்க முயன்றார்.
போலீசார் அதை தடுக்க முயன்றனர். ஆனால் அவர்கள் கையில் விஷப்பாட்டிலை வைத்து கொண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதனால் கலெக்டர் அலுவலகம் பரபரப்பானது. ஒரு வழியாக மடக்கி பிடித்த போலீசார் பாட்டிலை கைப்பற்றினர்.
பின்னர் அவர்கள் கலெக்டரிடம் சாயமலை பகுதியில் விவசாயம் செய்து வருகிறோம். எங்களுக்கு பாத்தியப்பட்ட புன்செய் நிலங்களை அதே பகுதியை சேர்ந்த 3 நபர்கள் ஆக்கிமித்து விவசாயம் செய்ய விடாமல் தடுக்கின்றனர்.
இது தொடர்பாக பனவடலிசத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. இதற்கு மாறாக அங்குள்ள இன்ஸ்பெக்டர் எங்கள் மீது பொய் வழக்கு போடுகிறார் என கலெக்டரிடம் தெரிவித்தனர். கலெக்டர் அவர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications