கருணாநிதிக்கு பிறந்தநாள் பரிசாக ரூ. 1.21 கோடி தேர்தல் நிதி கொடுத்த தொண்டர்கள்
சென்னை: தமிழகம் முழுவதும் கோலாகலமாக தி.மு.க., தலைவர் கருணாநிதியின், 90வது பிறந்த நாள் விழா, நேற்று கொண்டாடப்பட்டது.
காலை முதலே பரபரப்பாக தொடங்கிய பிறந்தநாள் நிகழ்ச்சிகள் இரவு வரை தொடர்ந்தன. போனிலும், இணையத்திலும், நேரிலும், கடிதம் வாயிலாகவும் வாழ்த்துக்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தன கருணாநிதிக்கு.
அறிவாலயத்தில், குவிந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களின் வாழ்த்துக்களோடு தொடங்கி பரிசுப்பொருட்கள், தேர்தல் நிதி என்று கொண்டாட்டம் தொடர்ந்தது.
பிறந்த நாள் கொண்டாட்டத்தின் சில சுவாரஸ்யங்கள் உங்களுக்காக இதோ...
குவிந்த தொண்டர்கள்...
அதிகாலையிலேயே கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூற கோபாலபுரம், சி.ஐ.டி காலனி வீடுகளில் தொண்டர்கள் குவிந்திருந்தனர்.
தொண்டர்களின் வாழ்த்துக்கள்...
கோபாலபுரம் வீட்டில், கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய கருணாநிதி, பின்னர் அண்ணா அறிவாலயம் சென்றார். அங்கு, நீண்ட வரிசையில் காத்து நின்று வாழ்த்த வந்திருந்த தொண்டர்களின் வாழ்த்துக்களை காலை 10 மணி முதல் 12.30 மணி வரை ஏற்றார்.
தேர்தல் நிதி...
அண்ணா அறிவாலயத்தில் வைக்கப் பட்டிருந்த விழா உண்டியலில், ஆர்வமுடன் தொண்டர்கள் அளித்த தேர்தல்நிதி ஏறக்குறைய ஒரு கோடியே 20 லட்சத்து 73 ஆயிரத்து 158 ரூபாய்.
ஆடு, பறவைகள் பரிசு...
ஆடு, லவ் பேர்ட்ஸ், வாழைக்குலைகள், சீர்வரிசை தட்டுகள், ரூபாய் நோட்டு மாலை, ஏலக்காய் மாலை, கிரிடம், வெள்ளி வாள், செங்கோல் என தொண்டர்களின் பிறந்தநாள் பரிசுகளால் களை கட்டியது அண்ணா அறிவாலயம்.
ரூபாய் நோட்டில் பரிசு...
500 ரூபாய் நோட்டுகள் கொண்ட செங்கோல், கிரீடம், வாள், பணங்கொத்து மற்றும் முக்கனிகள் போன்ற வித்தியாசமான பரிசுகள் பலரது கவனத்தையு ஈர்ப்பதாக இருந்தது.
மோதிரம் பரிசு...
சில ஊர்களில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டதாம்.












Click it and Unblock the Notifications