கருணாநிதி பற்றி அவதூறாக பேசிய போதும் வழக்கு போடவில்லை… விஜயகாந்த்

திருவண்ணாமலை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக இன்று காலை 11 மணிக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு விஜயகாந்த் வந்தார். அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி நாகநாதன், வழக்கின் மறு விசாரணையை ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையடுத்து நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
பான்மசாலா, குட்கா போன்ற போதை வஸ்துக்களை தமிழ்நாட்டில் தடை செய்திருக்கிறார்கள், ஆனால் டாஸ்மாக் கடையை மூட மறுக்கிறார்கள். அதில் அதிக வருமானம் வருகிறது என்று மூட மறுக்கிறார்கள் அப்படியானால் பொதுமக்கள் சாராயத்தால் பாதிக்கப்பட்டால் பரவாயில்லையா?.
கலைஞர் ஆட்சியில் அவதூறாக பேசப்பட்ட போதெல்லாம் கருணாநிதி பொய் வழக்குகள் போடாமல் பெருந்தன்மையாக நடந்துக் கொண்டார்.
நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. கண்டிப்பாக நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மண்ணை கவ்வும். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் வழக்கை மேல்முறையீடு செய்யப்படும் என்றும் விஜயகாந்த் கூறினார்.
கோபப்பட்ட விஜயகாந்த்
விஜயகாந்த் பேட்டி கொடுத்த போது, அங்கே வந்த திருவண்ணாமலை நகர காவல் ஆய்வாளர் குணசேகரன், நீதிபதி உத்தரவுபடி கோர்ட் வளாகத்திற்குள் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுக்க கூடாது என்று விஜயகாந்திடம் கூறினார். அதற்கு விஜயகாந்த் கோபமாக அவரை பார்த்து, அப்போ ஏன் என் வண்டியை உள்ளே விட்டீர்கள் என்று சொல்லிவிட்டு காரில் ஏறி சென்றார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications