’மிக்கி’ சர்க்கஸ் குரங்கு எடுத்த ஃபோட்டோ: லண்டனில் 44 லட்ச ரூபாய்க்கு ஏலம்
லண்டன்: மிக்கி என்ற குரங்கு எடுத்த புகைப்படம் ஒன்று 44 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளது.
சமீபத்தில் லண்டனில் ரஷ்ய புகைப்பட ஏலம் நடை பெற்றது. இதில் மிக்கி என்ற குரங்கு எடுத்த போட்டோ ஒன்று அதிகமான விலையாக கிட்டத்தட்ட 44 லட்ச ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.
மிக்கிக்கு போட்டோ எடுக்கக் கற்றுக் கொடுத்தது விடாலி கோமர் மற்றும் அலெக்ஸாண்டர் மேளமிட் என்ற சர்க்கஸ் கலைஞர்கள். கற்றுக் கொள்ள ஆரம்பித்த உடனே, புகைப்படங்களை எடுத்துத் தள்ள ஆரம்பித்து விட்டதாம் மிக்கி.

ரெட் ஸ்கொயர் போட்டோ...
மிக்கியால் எடுக்கப்பட்ட மாஸ்கோவின் புகழ் பெற்ற ரெட் ஸ்கொயர் போட்டோ, சமீபத்தில் லண்டனில் சோத்பி எனும் இடத்தில் நடைபெற்ற ரஷ்ய புகைப்பட கண்காட்சியில், கிட்டத்தட்ட 50,000 பவுண்டுகளுக்கு ஏலம் போயுள்ளது.

போகஸ் ஆகலை...
தெளிவில்லாமல், சற்றே மங்கலாக இருக்கிறது இப்புகைப்படம். ஆனாலும் மிக்கியின் கைகளால் எடுக்கப்பட்ட காரணத்திற்காக, இந்தப் போட்டோவை கிரா என்ற ரஷ்யர் வாங்கியுள்ளார்.

விலங்குகள் சூப்பர் பாஸ்...
இவ்வளவு விலை கொடுத்து போட்டோவை வாங்கிய, கிரா தெரிவித்ததாவது, ‘ சில நேரங்களில் மனிதர்களை விட விலங்குகள் ஒரு செயலை சிறப்பாக செய்வதை நம்மால் காணமுடியும். மிக்கியின் இந்த புகைப்படம் அது போன்ற ஒன்றுதான்' என கூறினார்.

அடேங்கப்பா...
இந்திய ரூபாய் மதிப்புப்படி 50,000 பவுண்டுகள் என்பது சரியாக 43,62,876 ரூபாயாகும். கியா இவ்வளவு விலை கொடுத்துத்தான், அந்த 'ரெட் ஸ்கொயர்' போட்டோவை வாங்கியுள்ளார்.

கண்ணீர் அஞ்சலி...
மாஸ்கோ சர்க்கஸ்ஸில் சாகசங்கள் பல புரிந்து, பலரின் செல்லப்பிள்ளையாக வாழ்ந்த மிக்கி, 2007 ஆம் ஆண்டு மரணமடைந்தது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications