இதுதான் உலகின் 'மலிவு விலை' பிராவாம்.. விலை 88 ரூபாய் 50 காசு!
லண்டன்: உலகிலேயே மிகவும் விலை மலிவான பிரா இதுதான் என்று பெளன்ட்வேர்ல்ட் நிறுவனம் ஒரு பிராவை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ஒரு பவுண்டாம். அதாவது நம்ம ஊர் மதிப்பில் ரூ. 88.50 ஆகும்.
பிரபலமான பெளன்ட்வேர்ல்ட் நிறுவனம் இந்த விலை மலிவு பிராவை களம் இறக்கியுள்ளது.
பரீட்சார்த்தமாக குறிப்பிட்ட அளவு பிராக்களை இது விற்பனையில் இறக்கியது. ஆனால் வந்த வேகத்தில் கிட்டத்தட்ட 1 லட்சம் பெண்கள் ஆளுக்கொரு பிராவை வாங்கிக் குவித்து விட்டனராம்.

டிசைன் ஓ.கே.
மலிவு விலை பிரா என்றதும் குவாலிட்டி சரியாக இருக்காது என்றுதான் பல பெண்களும் நினைத்தனர். ஆனால் இந்த பிராவின் தரம் சிறப்பாக உள்ளதாக பெண்கள் சந்தோஷத்துடன் கூறியபடி வாங்கிச் சென்றனராம்.

ஆனா ஸ்டைல் இல்லை
டிசைன் நன்றாக இருக்கிறது, தரமும் ஓ.கே. என்று பெண்கள் கூறினாலும் இந்த பிரா ஸ்டைலாக இல்லை என்பதும் பெண்களின் கருத்தாக உள்ளது.

செக்ஸ் அப்பீலும் இல்லை
மற்ற டிசைனர் பிராக்கள், விலை உயர்ந்த பிராக்களுடன் ஒப்பிடுகையில் இந்த பிராக்களில் செக்ஸ் அப்பீலும் இல்லை என்பதும் பெண்களின் கருத்தாகும்.

ஆனாலும் விற்பனை ஹாட்தான்
கடந்த வாரம்தான் இந்த மலிவு விலை பிரா பரீட்சார்த்தமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சில கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டது. இந்த பிராக்களை கிட்டத்தட்ட 1 லட்சம் பெண்கள் வாங்கியுள்ளதாக புள்ளி விவரக் கணக்கு கூறுகிறது.

10 லட்சம் பிராக்களுக்கு குறி
பரீட்சார்த்த விற்பனைக்கே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த பிரா முறைப்படி விற்பனைக்கு வரும்போது பெருமளவில் விற்பனையாகும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு வந்துள்ளது. முதல் கட்ட விற்பனையிலேயே பத்து லட்சம் பிராக்களாவது விற்பனையாகும் என்றும் அவர்கள் கணித்துள்ளனர்.

3 வண்ணம்.. மீடியம் டூ எக்ஸ்ட்ரா லார்ஜ்
இந்த பிராக்கள் கருப்பு, வெள்ளை மற்றும் நியூட் நைலான் என மூன்று நிறங்களில் வருகிறது. மீடியம் முதல் எக்ஸ்ட்ரா லார்ஜ் அளவுகளில் கிடைக்கும்.

பெண்களுக்குப் பொருத்தமானது
இந்த பிரா குறித்து தயாரிப்பாளரான பெளன்ட்வேர்ல்ட் கூறுகையில், பெண்களுக்கு மிகவும் பொருத்தமான அளவில் இந்த பிராக்கள் உள்ளன. எந்தவித அசவுகரியமும் இதில்
இல்லை. மிக மிக பொருத்தமானது, வசீகரமானதும் கூட என்று கூறுகிறது பெளன்ட்வேர்ல்ட்.

எல்லாமே ஒரு பவுண்டுதான்
பெளன்ட்வேர்ல்ட் நிறுவனத்திற்கு இங்கிலாந்தில் நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளன. இங்கு என்ன விசேஷம் என்றால் இங்கு எல்லாப் பொருட்களுமே ஒரு பவுண்டுதான்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications