மைக்கேல் ஜாக்சன் அப்பா இல்லை என்றதால் மகள் தற்கொலைக்கு முயற்சியா?
லாஸ் ஏஞ்சலெஸ்: மைக்கேல் ஜாக்சன் தனது தந்தை இல்லை என்று வந்த செய்தியால் மனம் உடைந்து அவரது மகள் பாரிஸ் ஜாக்சன் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
15 வயதான பாரிஸ் ஜாக்சன் சமீபத்தில் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தீவிர சிகிச்சைக்குப் பின்னர் பாரிஸ் ஜாக்சன் தற்போது அபாய கட்டத்தைத் தாண்டி விட்டார்.
இந்த நிலையில் பாரிஸ் ஏன் தற்கொலைக்கு முயன்றார் என்பது தொடர்பாக சில புதிய செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது மைக்கேல் ஜாக்சனுக்கு தான் பிறக்கவில்லை, ஜாக்சனின் குழந்தைகள் யாரும் அவருக்குப் பிறந்ததில்லை என்று வந்த செய்திகளால் அதிர்ச்சி அடைந்தே பாரிஸ் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

அழகான புத்திசாலி
ஜாக்சனின் மகளான பாரிஸ் மிகவும் அழகானவர் மட்டுமல்ல, புத்திசாலியான பெண்ணும் கூட. அவர் இன்று தற்கொலைக்கு முயன்றது ஜாக்சன் குடும்பத்தினரை உலுக்கியுள்ளது.

ஒன்றிணைந்து பிரார்த்தனை
பாரிஸ் தற்கொலை முயற்சியைத் தொடர்ந்து தற்போது பல்வேறு காரணங்களுக்காக கோர்ட்களில் அடித்துக் கொண்டிருந்த ஜாக்சன் குடும்பத்தினர் ஒன்றிணைந்துள்ளனர். அனைவரும் பாரிஸ் நலமுடன் திரும்புவதற்காக துடித்துக் கொண்டிருக்கின்றனர்.

பல மாத மன உளைச்சல்
கடந்த பல மாதங்களாகவே பாரிஸ் மனதளவில் பெரும் உளைச்சலில் சிக்கித் தவித்து வந்தாராம். மேலும் தனது குடும்பத்தினருக்கிடையே நிலவி வந்த சொத்துப் பிரச்சினை, சட்ட போராட்டம் அவரை வெகுவாக பாதித்துள்ளது.

ஜாக்சன் என் டாடி இல்லையா...?
இந்தநிலையில்தான் மைக்கேல் ஜாக்சனின் எந்தக் குழந்தையும் அவருக்குப் பிறந்ததில்லை என்ற செய்திகள் வெளியாகி பாரிஸை பெரும் மன உளைச்சலில் தள்ளி விட்டது. ஜாக்சன் எனது தந்தை இல்லையா என்று அவர் புலம்பி வந்தாராம்.
இதேபோல மேலும் பல விஷயங்களும் பாரிஸின் மன உளைச்சலுக்குக் காரணமாக காட்டப்படுகிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications