லோக்சபா தேர்தல்.. மோடியை பாஜக முன்னிறுத்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் ஆதரவு!

கோவா மாநிலத் தலைநகர் பனாஜியில் பாஜகவின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் மற்றும் தேசிய செயற்குழுக் கூட்டம் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் செயற்குழுக் கூட்டத்தை பாஜகவின் மூத்த தலைவர்கள் அத்வானி, ஜஸ்வத்சிங், உமாபாரதி உள்ளிட்டோர் புறக்கணித்துள்ளனர். லோக்சபா தேர்தலுக்கான பிரசாரக் குழுத் தலைவராக மோடி நியமிக்கப்படுவதை எதிர்த்தே இந்த மூத்த தலைவர்கள் செயற்குழுக் கூட்டத்தைப் புறக்கணித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ஊசிப் போன ஊறுகாய் அத்வானி
இந்த நிலையில் கோவா மாநில ஆளும் பாஜக முதல்வர் மனோகர் பாரிக்கர், நரேந்திர மோடியை முன்னிறுத்தி லோக்சபா தேர்தலை பாரதிய ஜனதா எதிர்கொள்ள முழு ஆதரவு தெரிவித்துள்ளார். இதே மனோகர் பார்க்கர்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு எல்.கே.அத்வானியை ஊசிப் போன ஊறுகாய் அத்வானி என்றும் வரது ஆட்டம் முடிந்து போன ஒன்றும் கடுமையாக விமர்சித்தி்ருந்தார். தற்போது மோடியை கடுமையாக அத்வானி எதிர்ப்பதால் வெளிப்படையாக மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் மனோகர் பாரிக்கர்.
மக்கள் விரும்பும் மோடி
இது தொடர்பாக அவர் கூறுகையில், ஆட்சி நிர்வாகத் திறமையால் நரேந்திர மோடி புகழ்பெற்றிருக்கிறார். அவரை முன்னிறுத்துவதன் மூலம் பாரதிய ஜனதா கட்சி கூடுதல் பலம் பெறும். மக்களின் கருத்தும் கூட பாஜகவின் தேர்தல் முகமாக நரேந்திர மோடி இருக்க வேண்டும் என்பதுதான். அவரைத்தான் பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவர்தான் கட்சியின் தேர்தல் முகம். இந்தக் கருத்தை தெரிவித்ததும் மக்கள்தான்..
பொதுமக்களின் கருத்து என்பது நரேந்திர மோடிக்கு ஆதரவாகத்தான் இருக்கிறது. தேர்தலுக்கு 10 மாதங்கள் இருக்கின்றன. இதற்காக பாஜக ஒரு கால அட்டவணையை உருவாக்க வேண்டும். யாரை தேர்தலில் முன்னிறுத்தப் போகிறோம் என்பதை 6 மாதங்களுக்கு முன்பே செய்ய வேண்டும். கோவா மாநிலத்தில் நான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. ஆனால் கட்சியின் முகமாக நான் அறியப்பட்டிருந்ததால் ஆட்சியில் அமர முடிந்தது.
முதல் டெஸ்ட்டில் பாஸான மோடி
நரேந்திர மோடியைப் பெறுவதில் அனைவராலும் பாராட்டப்படுகிற புகழப்படுகிறவர். அவர் தமது முதல் தேர்வில் பாஸாகிவிட்டார். 2வது தேர்வு என்பது கூட்டணிக் கட்சிகள் ஒப்புக் கொள்ளப்பட வேண்டியதுதான். இப்போது இதில்தான் சிக்கல். 543 எம்.பிக்கள் கொண்ட லோக்சபாவில் ஆகக் குறைந்தது 210 இடங்களைப் பெற வேண்டும். இல்லையெனில் ஆட்சி அமைக்க முடியாது. மோடியை முன்னிறுத்தி தேர்தலை எதிர்கொண்டால் பாரதிய ஜனதாவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 220 இடங்களுக்கும் அதிகமாகவே பெற முடியும்.
காங்கிரஸும் பாராட்டும் மோடி
கடந்த 10 ஆண்டுகளில் குஜராத் மாநிலத்தில் மோடி நல்ல நிர்வாகத்தைக் கொடுத்திருக்கிறார். அவரது நல்ல நிர்வாகத் திறனை தனிப்பட்ட முறையில் காங்கிரஸ் தலைவர்களும் கூட பாராட்டுகின்றனர். என்னைப் பொறுத்தவரையில் கோவா செயற்குழுக் கூட்டத்தில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படமாட்டார்கள் எனத் தெரிகிறது. ஆனால் 380 செயற்குழு உறுப்பினர்களிடமும் கருத்து கேட்டு அதன் பின்பு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூடி இறுதி முடிவெடுப்பார்கள் என்றார் அவர்.
-
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி











Click it and Unblock the Notifications