மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை தோல்வியைத் தழுவிவிட்டது: பாஜக சாடல்!
பனாஜி: மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை தோல்வியைத் தழுவிவிட்டது என்று பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன் சாடியுள்ளார்.
பனாஜியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் சுயமரியாதை தீர்மானம் தொடர்பாக பாஜக இன்று விவாதித்தது. மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசானது அனைத்து நிலைகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. உள்நாட்டு பாதுகாப்பு விவகாரங்களில் பயங்கரவாதம் தொடர்பான விஷயங்களில் மத்திய அரசு தோல்வியைத் தழுவியுள்ளது்.
மத்திய அரசானது பயங்கரவாத தாக்குதலை மதவாதமாக்குகிறது. இது இந்திய இறையாண்மை தொடர்பான நடவடிக்கைகளை நீர்த்துப் போகச் செய்யும். மாவோயிஸ்டு விவகாரம் என்பது ஒரு மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. மாவோயிஸ்டுகள் தாக்குதலைத் தொடர்ந்து சத்தீஸ்கர் மாநில அரசை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் விமர்சிக்கின்றனர். மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலை மாநில் அரசு எதிர்கொள்வதற்கு போதுமான உதவிகளை மத்திய அரசு செய்யவில்லை.
பாகிஸ்தான் ராணுவத்தினர் நமது ராணுவத்தினரின் தலையை வெட்டி எடுக்கும் போது மத்திய அமைச்சர்கள் பாகிஸ்தான் தலைவர்களுக்கு விருந்து அளித்துக் கொண்டிருக்கின்றனர். மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை தோல்வி அடைந்துவிட்டது. சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் காங்கிரஸ் தலைவர்களுக்கு தொடர்பு என்று தேசிய புலனாய்வு ஏஜென்சி கூறியிருக்கும் தகவல் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது என்றார் அவர்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக!












Click it and Unblock the Notifications