உ.பி.: 8ம் வகுப்பு மாணவனை கூலிப்படையை ஏவி சுட்டுக் கொன்ற இன்ஸ்பெக்டர்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் 8ம் வகுப்பு மாணவர் ஒருவரை கூலிப்படை மூலம் சுட்டுக் கொன்றது தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் மனித கடத்தல் தடுப்பு பிரிவில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் சஞ்சய் ராய். 12 ஆண்டுகளாக போலீஸாக இருக்கும் அவர் போலீஸ் பயிற்சிக்கு வந்த ஒரு இளம் பெண்ணை காதலித்தார். ஆனால் அவர் காதலை அப்பெண் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ராய் அப்பெண்ணின் குடும்பத்தாரை பழி வாங்க முடிவு செய்தார்.
இதையடுத்து அவர் அஜீத் ராய் மற்றும் ராகுல் ராய் ஆகியோருக்கு ரூ.2.5 லட்சம் பணம் கொடுத்து அப்பெண்ணின் உறவினரான 8ம் வகுப்பு மாணவன் மாஸை சுட்டுக் கொல்லுமாறு கூறியுள்ளார். அதன்படி அவர்கள் சிறுவனை சுட்டுக் கொன்றனர். அவர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இன்ஸ்பெக்டர் சொல்லித் தான் சிறுவனைக் கொன்றதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே இன்ஸ்பெக்டர் தலைமறைவாகிவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications