ராஜ்யசபா தேர்தல்.. அதிமுகவின் 5வது வேட்பாளர்...பீதியில் தேமுதிக!

தமிழகத்தில் இருந்து 6 ராஜ்யசபா எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க இம்மாதம் 27-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 151 எம்.எல்.ஏக்களைக் கொண்டிருக்கும் அதிமுக 5 இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதிமுகவுக்கான பலத்தின் அடிப்படையில் 4 எம்.பிக்கள் தேர்வு செய்யப்படுவது உறுதியானது. எஞ்சிய சபாநாயகர் உட்பட அதிமுகவுக்கு 15 எம்.எல்.ஏக்கள்தான் இருக்கின்றனர். இதனால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு அதிமுகவின் 5வது வேட்பாளருக்கு அவசியமாகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக அணியில் வெற்றி பெற்ற புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 2 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதேபோல் பார்வார்டு பிளாக் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ இருக்கிறார். இவர்கள் போக மேலும் 14 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை.
இந்த 14 பேரில் ஏற்கெனவே அதிமுக ஆதரவு தேமுதிக எம்.எல்.ஏக்கள் 6 பேர் இருப்பதால் அவர்கள் அதிமுக வேட்பாளரை ஆதரிக்கலாம். இந்த 6 பேரும் போக மேலும் 8 எம்.எல்.ஏக்களின் ஆதரவு அதிமுகவுக்கு தேவை. சட்டசபையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 8 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்த 8 எம்.எல்.ஏக்கள் அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்களிக்க வேண்டும். இல்லையெனில் மேலும் 8 தேமுதிக எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டு வாக்களிக்க வைக்க வேண்டும். அப்படி மேலும் 8 தேமுதிக எம்.எல்.ஏக்கள் ‘பகிரங்கமாக' அதிமுக ஆதரவு அதிருப்தி அணிக்குத் தாவினால் போட்டி தேமுதிக உதயமாவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும்.
மேலும் 6வது இடம் யாருக்கு என்பதில் தொடர்ந்தும் குழப்பம் நீடித்தே வருகிறது. தேமுதிக அல்லது திமுக ஏதாவது ஒரு முடிவை அறிவிக்கும்பட்சத்தில் அடுத்த பரபரப்பு உருவாகும்.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications