திருப்பூர் குமரனின் வளர்ப்பு மகன் தர்மலிங்கம் மறைவு
திருப்பூர்: சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரனின் வளர்ப்பு மகன் தர்மலிங்கம் நேற்று காலமானார்.
கொடிகாத்த குமரன் என்றழைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரன்- ராமாயம்மாள் தம்பதியருக்கு வாரிசுகள் இல்லை. ராமாயம்மாளின் சகோதரி மீனாட்சி. அவரது கணவர் ரங்கசாமி. அவர்களுக்கு தர்மலிங்கம் மற்றும் சண்முகம் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
மேலும் இளம் வயதிலேயே மீனாட்சி இறந்துவிட்டார். இதனால் திருப்பூர் குமரன்- ராமாயம்மாள் தம்பதியினர் மீனாட்சியின் 2 குழந்தைகளையும் எடுத்து வளர்த்து வந்தனர்.
தர்மலிங்கம் திருப்பூரில் பஞ்சு வியாபாரம் செய்து வந்தார். கடந்த சில நாட்களாக அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. இந்த நிலையில் திருப்பூர் ஓடக்காட்டில் உள்ள அவரது வீட்டில் நேற்று காலமானார். மறைந்த தர்மலிங்கத்திற்கு வள்ளியம்மாள் என்ற மனைவியும், மூன்று மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர். இதில் மகன் ஒருவர் இறந்துவிட்டார்.
மறைந்த தர்மலிங்கம் உடலுக்கு அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், காங்கிரஸ் கட்சி முக்கிய நிர்வாகிகள், சமூக சேவகர்கள் மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அவரது உடல் நேற்று மாலை திருப்பூர் ரோட்டரி மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications