Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆசிரியையின் லேப்டாப்பை நோண்டி ஆபாசப் படத்தை எடுத்து இன்டர்நெட்டில் போட்ட மாணவர்கள்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: வகுப்பு ஆசிரியையின் லேப்டாப்பை எடுத்து நோண்டிய மாணவர்கள், அதில் அந்த ஆசிரியையின் ஆபாசப் படம் இருப்பதைப் பார்த்து அதை திருடி இன்டர்நெட்டில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி விட்டனர்.

பரீட்சைக் கேள்வித்தாள் இருக்கிறதா என்பதைப் பார்க்கத்தான் ஆசிரியையின் லேப்டாப்பை எடுத்து நோண்டியுள்ளனர் மாணவர்கள். ஆனால் வினாத்தாளுக்குப் பதில் ஆசிரியையின் ஆபாசப் படம் சிக்கியதால் அதை எடுத்து இன்டர்நெட்டில் போட்டு விட்டனர் மாணவர்கள்.

ரஷ்யாவில்தான் இந்த செயல் நடந்துள்ளது. அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக இருப்பவர் 34 வயதான நதாலியா மொலகோவா. இவர் சம்பவத்தன்று தனது வகுப்பில் தனது லேப்டாப்பை விட்டு விட்டு அருகே போயுள்ளார்.அப்போது மாணவர்கள் சிலர் லேப்டாப்பை எடுத்து எதிர் வரும் பரீட்சைக்கான கேள்வித்தாள் இருக்கிறதா என்று பார்த்துள்ளனர். ஆனால வினாத்தாள் கிடைக்கவில்லை.

ஆனால் ஆசிரியையின் புகைப்படம் ஒன்றுலேப்டாப்பில் ஒரு ஃபோல்டரில் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தனர். அந்த புகைப்படத்தில் ஆசிரியை பிரா, பேண்டீஸ் மட்டுமே போட்டிருந்தார். இதையடுத்து வேகம் வேகமாக அந்தப் படத்தைத் திருடிக் கொண்டனர். பின்னர் அதை இன்டர்நெட்டில் போட்டு விட்டனர்.

இந்தப் படம் படு வேகமாக பரவி விட்டது. இது ஆசிரியைக்கும் தெரிய வந்து அவர் அதிர்ந்தார். வெட்கம் அவரைப் பிடுங்கித் தின்றது. அவமானமாக உணர்ந்த அவர் பள்ளிக்குப் போகவில்லை. வேலைக்குப் போவதையே பாவம் நிறுத்தி விட்டார்.

இந்த விவகாரம் குறித்து பள்ளி நிர்வாகம் விசாரித்து வருகிறது. காவல்துறையும் விசாரணையில் இறங்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+