டெல்லியில்தான் நல்ல சாப்பாடு கிடைக்கிறதாம்!
டெல்லி: பயணத்தில் அதிகம் எதிர்பார்ப்பது ருசியான உணவு எங்கே கிடைக்கும் என்றுதான். இந்தியாவிலேயே தலைநகர் டெல்லியில்தான் சிறந்த சாப்பாடு வகைகள் கிடைப்பதாக ஒரு கருத்துக் கணிப்பு கூறுகிறது.
இதுதொடர்பான கருத்துக் கணிப்பை லோன்லி பிளானட் பத்திரிக்கை நடத்தி வெளியிட்டுள்ளது. சுற்றுலா பயணிகளிடையே மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் இந்தியாவிலேயே டெல்லியில்தான் சாப்பாடு சிறப்பாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் டெல்லியில்தான் நல்ல, சுவையான சாப்பாடு வகைகளை காண்பதாகவும் அது கூறுகிறது.

டெல்லிதான் பெஸ்ட்
இந்தியாவிலேயே டெல்லியில்தான் சாப்பாடு சுவையாக இருக்கிறது. அதோடு சுகாதாரமான குடிநீர் இருப்பதாக இந்த பத்திரிக்கை தெரிவிக்கிறது.

எங்களுக்குப் பெருமை
இதுகுறித்து டெல்லி சுற்றுலா மேம்பாட்டுக் கழக தலைவர் மனீஷ் சத்ராத் கூறுகையில், டெல்லியலி்தான் நல்ல சாப்பாடும், குடிநீரும் இதர உணவு வகைகளும் கிடைப்பது பெருமை தருகிறது என்றார்.

சுற்றுலாப் பயணிகளின் கருத்து
சுற்றுலாப் பயணிகளிடம் இதுதொடர்பான கருத்துக் கணிப்பை லோன்லி பிளானட் பத்திரிக்கை நடத்தி அதிலிருந்து இந்த முடிவுக்கு வந்துள்ளதாம்.
பிறகென்ன ஒருமுறையாவது டெல்லிக்குப் போய்ட்டு வாங்களேன் சுற்றிப் பார்ப்பதோடு வாய்க்கு ருசியாக சாப்பிட்டு விட்டும் வரலாம்.












Click it and Unblock the Notifications