கோவாவுக்கு வந்த மோடியுடன் குஜராத்திலிருந்து கூடவே வந்த புல்லட் புரூப் கார்!
பனாஜி: கோவாவில் நடந்த பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தனக்குச் சொந்தமான புல்லட் புரூப் காரை பிரத்யேகமாக வரவழைத்துப் பயன்படுத்தியுள்ளார்.
கோவாவில் குண்டு துளைக்காத கார் கிடைப்பதி்ல் சிக்கல் எழுந்ததால் கையோடு தனது காருடன் வந்து விட்டாராம் மோடி.

கோவாவில் கூடிய பாஜக
கோவாவில் சமீபத்தில் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் நடந்தது. அதில் மோடிதான் ஹீரோவாக பார்க்கப்பட்டார். பெரும் பஞ்சாயத்துக்குப் பின்னர் அவருக்கு அங்கு முடி சூட்டப்பட்டது.

சிங்கிள் புல்லட் கூட இல்லாத கோவா
ஆனால் பாதுகாப்பு நடவடிக்கையில்தான் கோவா போலீஸார் பெருமளவில் திணறிப் போய் விட்டனர். அந்த குட்டியூண்டு மாநிலத்தில் ஒரு புல்லட் புரூப் கார் கூட கிடையாதாம்.

மோடிக்கு வந்த சிக்கல்
இசட் பிளஸ் பிரிவின் கீழ் உள்ளவர்களுக்கு குண்டு துளைக்காத கார் கொடுக்கப்பட வேண்டும். மோடி அந்தப் பாதுகாப்புப் பிரிவில் இருப்பவர். ஆனால் அவருக்கு குண்டு துளைக்காத காரைக் கொடுக்க முடியாத நிலை.

யாமிருக்க பயமேன்...
இதை அறிந்த மோடி, நோ ப்ராப்ளம். எனது காரை கொண்டு வந்து விடுகிறேன் என்று கூறி குஜராத்தில் தான் பயன்படுத்தும் குண்டு துளைக்காத காருடன் கிளம்பி வந்து விட்டாராம்.

அதி பயங்கர பாதுகாப்புக் கார்
மோடி பயன்படுத்திய குண்டு துளைக்காத கார் அதி பயங்கரமான பாதுகாப்பு வசதிகளைக் கொண்டதாம்.

மேலும் 2 கொடுங்க.. கடன் கேட்ட கோவா
ஆனால் வேறு சில தலைவர்களுக்கும் குண்டு துளைக்காத கார் வேண்டும் என்பதற்காக, கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிர மாநில அரசுகளிடமும் கோவா கோரிக்கை வைத்ததாம்.

இதெல்லாம் போலீஸுக்குள் சகஜமப்பா...
இதுகுறித்து கோவா டிஜிபி ஓ.பி.மிஸ்ரா கூறுகையில், இதெல்லாம் மாநிலங்களுக்கிடையிலான காவல்துறைக்கு இடையிலான பரஸ்பர விவகாரமாகும் என்றார்.

அந்த 2 கார் யாருக்கு...?
அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷிக்கு கொடுப்பதற்காகவே இந்த இரண்டு கார்களை ஓசியில் கேட்டதாம் கோவா. ஆனால் அத்வானி கூட்டத்திற்கு வரவே இல்லை. ஜோஷி மட்டுமே வந்திருந்தார்.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications