என்னைப் பழிவாங்கப் பார்க்கிறார் ஜியா கானின் தாய்!

பாலிவுட் நடிகை ஜியா கான் தற்கொலை வழக்கில், அவரது காதலன் சூரஜ் பஞ்சோலி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், சூரஜ் பஞ்சோலியின் போலீஸ் காவல் முடிவடைந்ததையடுத்து அவர் இன்று மும்பை நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவில், "ஜியா கான் ஜூன் 3-ம் தேதி தற்கொலை செய்தார். ஆனால் 4 நாட்களுக்குப் பிறகு அவர் எழுதிய கடிதத்தை கண்டுபிடித்த அவரது தாயார், அதனை தவறாக பயன்படுத்துகிறார். ஜியா கான் தற்கொலைக்கு முன்னர் அந்தக் கடிதத்தை எழுதியிருக்க முடியாது.
எல்லாவற்றிற்கும் மேலாக அந்த கடிதத்தை எனக்கு எழுதவில்லை. எனது பெயரையும் அதில் குறிப்பிடவில்லை. அவரது தாயார் என்னை பழிவாங்க முயற்சிக்கிறார்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவிற்கு காவல்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, ஜாமீன் மனு மீதான விசாரணை 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சூரஜ் பஞ்சோலியிடம் மேலும் பல தகவல்களை பெற வேண்டியிருப்பதால் அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை நிராகரித்த கோர்ட், சூரஜ் பஞ்சோலியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டது.
சூரஜ் பஞ்சோலி தன்னைக் காதலித்து, செக்ஸ் வைத்துக் கொண்டு பின்னர் வேறு பெண்களுடன் தொடர்பு கிடைத்ததும் ஏமாற்றிவிட்டதாக தனது கடிதத்தில் ஜியா கான் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
மேலும் ஜியா கானை தான் அடித்ததாகவும் போலீசில் சூரஜ் வாக்குமூலம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications