கார் விபத்தில் சிறுவன் பலி: குடிபோதையில் கார் ஓட்டியதாக ஷாஜி ஒப்புதல்
சென்னை: கார் மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில், குடித்து விட்டு கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக தொழிலதிபர் ஷாஜி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த மே 23-ஆம் தேதி, சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில், ஷாஜி சென்ற கார், தாறுமாறாக ஓடி சாலை ஓரத்தில் படுத்திருந்தவர்கள் மீது மோதியது. இதில் முனிராஜ் என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். ஆனால் ஷாஜி தாய்லாந்துக்கு தப்பி சென்றார். அவருக்குப் பதிலாக அவரது ஓட்டுநர் ஒருவர் தாமே இந்த விபத்தை நிகழ்த்தியதாக சரணடைந்தார்.
இந்நிலையில், தாய்லந்திற்கு தப்பி சென்ற ஷாஜியை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து ஷாஜி இந்தியா திரும்பினார். பாங்காக்கில் இருந்து விமானத்தில் நாடு திரும்பிய ஷாஜியை, தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் கொச்சியில் கைது செய்தனர்.
இதையடுத்து, எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, ஜூன் 27-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், விசாரணையின் போது, விபத்திற்கு தாமே காரணமென ஷாஜி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications