திருப்பதியில் வாகன ரெய்டு...ரூ. 2.30 கோடி மதிப்புள்ள ‘முடி’ சிக்கியது!
திருப்பதி: திருப்பதியில், வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட 2.3 கோடி மதிப்புள்ள 4 டன் தலைமுடியை பறிமுதல் செய்தனர்..
திருப்பதியின் பிரதான வேண்டிதலாக முடி காணிக்கை அளித்தல் உள்ளது. ஏழுமலையானை தரிசிக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். சிலர் வேண்டுதல்களுக்காக தங்கம், வெள்ளி, பணம் உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
குபேரக் கடவுளான ஏழுமலையானின் கோவிலில் டன் கணக்கில் சேரும் தலைமுடியை திருப்பதி தேவஸ்தானம் டெண்டர் மூலம் ஏலம் விட்டுவருகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில் சென்னையை சேர்ந்த ரேணுகா விக்னேஷ்வரா சுப்ரீம் ஸ்ரீனிவாச டிரேடர்ஸ் நிறுவனங்களுக்கு 6,700 கிலோ தலைமுடியை பல கோடி ரூபாய்க்கு தேவஸ்தானம் விற்பனை செய்பப் பட்டது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு டெண்டர் மூலமாக பெறப்பட்ட தலைமுடியை சம்பந்தப்பட்ட நிறுவனத்தார், திருப்பதி அலிபிரி பகுதியில் உள்ள தேவஸ்தான குடோனில் இருந்து நேற்றிரவு லாரி, கார்களில் கொண்டு சென்றுள்ளனர். திருப்பதி அடுத்த கபிலதீர்த்தம் அருகே ஆந்திர மாநில வணிக வரித்துறை கண்காணிப்பு அமலாக்க துறை போலீசார் வாகனங்களை தடுத்து சோதனை செய்த போது, லாரியில் இருந்த 5 டன் தலைமுடிக்கான அனுமதி சீட்டு மற்றும் ஆந்திர அரசுக்கு சொந்தமான வரி செலுத்திய ரசீது இருந்ததுள்ளது.
பின்னர், லாரியை பின்தொடர்ந்து வந்த 3 கார்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்து பார்த்ததில், ரூ.2 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள 4 டன் தலைமுடி காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. ஆனால், அம்முடிகளுக்கான முறையான ரசீதுகளோ, அனுமதிச் சீட்டோ இல்லை.
இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் தலைமையில், காரில் இருந்த தலைமுடியை போலீசார் பறிமுதல் செய்தனர். முடி கடத்தல் விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications