இறுதி வரை தமிழ்த் தேசியப் போராளியாக வாழ்ந்தவர் மணிவண்ணன் - திருமா இரங்கல்
சென்னை: விடுதலைப் புலிகளை ஆதரிப்பதிலும், தமிழீழத்தை ஆதரிப்பதிலும், முன்னணியில் இருந்தவர் மணிவண்ணன். தம்முடைய இறுதி மூச்சு வரையில் ஒரு தமிழ்த் தேசியப் போராளியாகவே வாழ்ந்து மறைந்தவர் அவர் என்று கூறியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.
இயக்குநர் - நடிகர் - எழுத்தாளர் மணிவண்ணன் மறைவுக்கு திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
இயக்குநர் மணிவண்ணன் அவர்கள் திடீர் மாரடைப்புக்கு ஆளாகி காலமாகிவிட்டார் எனும் செய்தி தாங்கிக்கொள்ள இயலாத அளவில் வேதனை அளிக்கிறது. இடதுசாரிக் கருத்துக்களில் ஈடுபாடு கொண்டு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களுக்காகச் சிந்திப்பதும் செயல்படுவதுமாக இருந்த மணிவண்ணன் திரைப்படத் துறையில் அதே கருத்துக்களைப் பரப்பினார்.
வசனகர்த்தாவாகவும், தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் திரைப்படத் துறையில் பல்வேறு பரிமாணங்களைப் பெற்று மகத்தான பங்களிப்பைச் செய்தார். பொதுமக்களின் பேராதரவையும் நன்மதிப்பையும் பெற்றார்.
அதேவேளையில் தமிழ் மொழி, தமிழின நலன்களுக்காக தயக்கமின்றி அச்சமின்றி குரல்கொடுக்கும் வல்லவராகவும் விளங்கினார். குறிப்பாக தமிழீழ விடுதலைக்காகவும், தமிழ்த் தேசிய அரசியலுக்காகவும் தீவிரமாகக் களமிறங்கிப் பணியாற்றினார்.
விடுதலைப் புலிகளை ஆதரிப்பதிலும், தமிழீழத்தை ஆதரிப்பதிலும் முன்னணியிலிருந்தார். தம்முடைய இறுதி மூச்சு வரையில் ஒரு தமிழ்த் தேசியப் போராளியாகவே வாழ்ந்தார். உலகத் தமிழர்களின் நம்பிக்கைக்கும் நன்மதிப்புக்கும் உரியவராக விளங்கினார்.
அவருடைய இழப்பு திரைப்படத் துறைக்கு மட்டுமின்றி தமிழ்த் தேசிய அரசியலுக்கும் மாபெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடுகிற குடும்பத்தினருக்கும் திரைப்படத் துறையினருக்கும் தமிழ்த் தேசிய உணர்வாளர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு அவருக்கு விடுதலைச் சிறுத்தைகளின் செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார் திருமாவளவன்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்













Click it and Unblock the Notifications