ராஜ்யசபா தேர்தலில் டி.ராஜாவுக்கு ஜெ. ஆதரவு: வேட்பு மனுவை வாபஸ் பெறும் அதிமுகவின் தங்கமுத்து!

அதிமுக சார்பில் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துள்ள அக்கட்சியின் விவசாயப் பிரிவு செயலாளர் தங்கமுத்து தனது மனுவை விலக்கிக் கொள்வார் என்றும் அறிவித்துள்ளார்.
தமிழக ராஜ்யசபா தேர்தலில் 6 இடங்களுக்கு 5 இடங்களில் வேட்பாளர்களை அதிமுக அறிவித்திருந்தது. அதிமுக சார்பில் நாடாளுமன்ற குழுத் தலைவர் டாக்டர் மைத்ரேயன், திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ரத்னவேல், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் ஆர்.லட்சுமணன், நீலகிரி மாவட்ட செயலாளர் கே.ஆர்.அர்ஜூனன் மற்றும் அதிமுக விவசாய பிரிவு செயலாளரான கு.தங்கமுத்து ஆகியோர் அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இந் நிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜாவும் ராஜ்யசபா எம்பி பதவிக்கு தமிழகத்தில் இருந்து போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்தது.
இதைத் தொடர்ந்து இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை டி.ராஜா சந்தித்து தமக்கு ஆதரவளிக்கக் கோரினார்.
டி.ராஜாவுடன் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் நல்லக்கண்ணு, மாநில செயலாளர் தா. பாண்டியன், உதவி செயலாளர் சி. மகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் எம். ஆறுமுகம், எஸ். குணசேகரன், கே. லிங்கமுத்து, என். நஞ்சப்பன், பி.எல். சுந்தரம், கே. உலகநாதன் மற்றும் வி. பொன்னுபாண்டி ஆகியோரும் சென்று ஜெயலலிதாவை நேரில் சந்தித்தனர். அப்போது அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையடுத்து டி. ராஜாவிற்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என்று ஜெயலலிதா அறிவித்தார். மேலும் அவருக்கு ஆதரவாக ஏற்கனவே வேட்பு மனுதாக்கல் செய்துள்ள அதிமுக விவசாயப் பிரிவு செயலாளர் கு. தங்கமுத்து தனது மனுவை வாபஸ் பெறுவார் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை டி. ராஜா தாக்கல் செய்தார். அவரது வேட்பு மனுவை அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏக்கள் முன் மொழிந்தும், வழிமொழிந்தும் கையெழுத்திட்டுள்ளனர்.
அதிமுக ஆதரவால் டி.ராஜாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
6 வது இடத்திற்கு கடும் போட்டி நிலவுகிறது. திமுக சார்பில் கனிமொழியும் தேமுதிக சார்பில் இளங்கோவனும் இந்த இடத்துக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications