பவளவிழா காணும் சென்னை அகில இந்திய வானொலி நிலையம்
சென்னை: சென்னையில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்திற்கு 75 வயதாகிறது. இதனைக் கொண்டாடும் விதமாக பவளவிழா கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1938ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி அகில இந்திய வானொலி நிலையம் சென்னை எழும்பூரில் தொடங்கப்பட்டது. அப்போதைய முதல்வர் ராஜாஜி தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றினார். 1954ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி சென்னை காமராஜர் சாலைக்கு வானொலி நிலையம் இடம் மாற்றப்பட்டது. இந்நிலையில் வானொலி நிலையம் தனது 75வது ஆண்டை நிறைவு செய்துள்ளது. இதை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தவுள்ளதாக சென்னை வானொலியின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் கே.பி. சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

விவிதபாரதி சேவை
சென்னை வானொலியில் 1957 விவிதபாரதி சேவையும், 1968-ல் வர்த்தக ஒலிபரப்பும் தொடங்கப்பட்டது. இப்போது எப்.எம். ஒலிபரப்பிலும் சாதனை படைத்து வருகிறது.இந்நிலையில் 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள சென்னை வானொலியின் பவள விழா வரும் ஜூன் 18-ம் தேதி மாலை 4.30 மணிக்கு சென்னை தியாகராய நகர் வாணி மகாலில் நடைபெறவுள்ளது.
பிரசார் பாரதியின் தலைமை செயல் அதிகாரி ஜவஹர் சர்க்கார், பிரசார் பாரதி கமிட்டி உறுப்பினர் வி.ஏ.எம். ஹூசைன், அகில இந்திய வானொலியின் இயக்குநர் ஜெனரல் லீலாதர் மண்டோலி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்க உள்ளனர்.
இவ்விழாவில் பிரபல கர்நாடக இசைக்கலைஞர் பாலமுரளிகிருஷ்ணா, என்.சி. காண்டீபன் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.பவள விழாவை முன்னிட்டு 1938-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி சென்னை வானொலி தொடக்க விழாவில் ராஜாஜி ஆற்றிய உரை வரும் 16-ம் தேதி காலை 7.30 மணிக்கு சென்னை ஏ அலைவரிசையில் ஒலிபரப்பப்படும்.இந்தியாவில் வானொலி ஒலிபரப்பு சேவை தொடங்கப்பட்டு 86 ஆண்டுகள் ஆனதை நினைவுகூரும் வகையில் வரும் ஜூன் 23-ம் தேதி சிறப்பு மலர் வெளியிடப்படும்.
பவள விழாவை முன்னிட்டு கடந்த ஓராண்டாக ஆவண காப்பகத்தில் இருந்து காமராஜர், அண்ணா, கிருபானந்த வாரியார் போன்றவர்களின் அரிய உரைகள், பிரபல இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் ஆவண காப்பகத்தில் இருந்து ஒலிபரப்பப்பட்டு வருகிறது. தலைவர்களின் உரைகள், இசை, பாடல், நாடகம் என சென்னை வானொலியில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான அரிய பதிவுகள் உள்ளன.75 ஆண்டுகளாக மக்கள் சேவையில் உள்ள சென்னை வானொலி வணிக ரீதியாகவும் வெற்றி கிடைத்துள்ளது. ஆண்டுக்கு ரூ. 20 கோடிக்கும் அதிகமாக விளம்பர வருவாய் கிடைக்கிறது என்றும் கே.பி. சீனிவாசன் தெரிவித்தார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications