நெல்லையில் 3 வயது குழந்தை, கள்ளக்காதலனுடன் ரயில் முன்பு பாய்ந்து பெண் தற்கொலை
நெல்லை: நெல்லையில் பெண் ஒருவர் தனது 3 வயது குழந்தை மற்றும் கள்ளக்கதாலனுடன் சேர்ந்து ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ள இருக்கன்துறை வேப்பம்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால். அவரது மனைவி சரஸ்வதி (30). அவர்களுக்கு 3 வயதில் ஒரு குழந்தை இருந்தது.
சரஸ்வதிக்கும் அப்பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் முத்துகுமார்(26) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இது பற்றி தெரிய வந்ததும் தனபால் தனது மனைவியை கண்டித்தார். ஆனால் அவர் தனது கள்ளக்காதலுடன் பழகுவதை நிறுத்திக்கொள்ளவில்லை.
இந்நிலையில் சரஸ்வதி தனது குழந்தையை தூக்கிக் கொண்டு முத்துகுமாருடன் நேற்று ஊரைவிட்டு ஓடிவிட்டார். இதையடுத்து தனபால் தனது மனைவியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நாங்குநேரி வாகைக்குளம் ரயில்வே கேட் அருகே குழந்தையுடன் 2 பேர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக நாகர்கோவில் ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்ததில் இறந்தவர்கள் சரஸ்வதி, அவரது குழந்தை மற்றும் முத்துகுமார் என்பது தெரிய வந்தது. உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்தவுடன் சரஸ்வதியும், முத்துகுமாரும் இன்று அதிகாலை நாகர்கோவிலில் இருந்து மும்பை நோக்கி சென்ற ரயில் முன்பு குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications