பாசக்கார அண்ணன் தம்பின்னா அது இவங்கதாண்டா...!
ஹராரே: அண்ணன் தம்பி என்றால் சின்னச் சின்ன செல்லச் சண்டை இல்லாமலா... ஆனால் இரண்டு சிங்கங்களிடையே நடந்த ஜாலி சண்டையை ஜிம்பாப்வே உயிரில் பூங்காவில் வைத்து ஒரு புகைப்படக்காரர் படமாக்கி வெளியிட்டுள்ளார்.
ஜிம்பாப்வேயில் உள்ள ஆன்டிலோப் பூங்காவில்தான் இந்த காமெடிச் சண்டைநடந்தது. அதைத்தான் புகைப்படக்காரர் டேவிட் ஜென்கின்ஸ் படமாக்கியுள்ளார்.
ஒரு அண்ணன், தம்பி சிங்கங்கள் போட்ட செல்லச் சண்டை டேவிட் கண்ணில் பட ஓரமாக உட்கார்ந்து கிளிக்கி எடுத்து விட்டார் டேவிட். அந்த சண்டையை நாமும் பார்ப்போமா...

சேட்டைக்கார தம்பி
அந்த பூங்காவில் இரண்டு சிங்கங்கள் விளையாடிக் கொண்டிருந்தன. இரண்டும் சகோதரர்கள். அதில் சின்ன வயது சிங்கமானது, அருகில் இருந்த பெரிய மரத்தில் ஏற முயற்சித்தது.

ஏக் தம்மில்....
தனது உடல் வலிமையைப் பொருட்படுத்தாமல், மரத்தில் ஏற முடியுமா என்று கூட யோசிக்காமல் தம்பி சிங்கமானது மரத்தைப் பற்றி கஷ்டப்பட்டு மேலே ஏறியது.

வேணாம் தம்பி வந்துரு...
இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது அண்ணன் சிங்கம். ஆனால் நேரம் ஆக ஆக தம்பி மரத்தில் ஏறி விடுவானோ என்று டென்ஷனாகி விட்டது அண்ணனுக்கு.

வாலைப் பிடிச்சு ஒரு இழு....
இதையடுத்து வேகமாக தம்பியை நெருங்கிய அண்ணன், தம்பியின் வாலைப் பிடித்து கீழே இழுத்தது. ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து மேலே ஏற முயன்றது தம்பி.

அதெப்படி தப்பிப்பே...
அதைப் பார்த்த அண்ணன், விடாமல் தானும் மரத்தின் மீது ஏறி, பின்னர் தம்பியின் பிடறியைப் பிடித்து வேகமாக இழுத்தது.

ரெண்டு பேரும் தொப்பு....
இதை சமாளிக்க முடியாத தம்பி அப்படியே அண்ணனுடன் சேர்ந்து கீழே விழுந்தது. பிறகென்ன இருவரும் சேர்ந்து மறுபடியும் விளையாட ஆரம்பித்தனர் - தரையில்தான்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications