2-வது மனைவியை ‘விபச்சாரி’யாக சித்தரித்து விளம்பரம் செய்த வாலிபர் கைது

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் தனது இரண்டாவது மனைவியின் ஆபாச புகைப்படங்களை இண்டர்நெட்டில் வெளியிட்டு பாலியல் தொழிலாளியாக சித்தரித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரை சேர்ந்தவரான நந்தகுமார் ஏற்கனவே திருமணம் ஆனவர். ஆனால், ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த இளம்பெண்ணை இன்டர்நெட் மூலம் 'சாட்' செய்து இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு தனது கணவரின் சுயரூபத்தை அறிந்த அந்த பெண், விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையில் உள்ள போதே, சொந்த வேலையாக அமெரிக்கா சென்று விட்டார் அப்பெண்.

மனைவி வழக்கு தொடுத்த ஆத்திரத்தில் இருந்த நந்தகுமார், அவரைப் பழிவாங்கும் விதமாக, மனைவியின் பெயரில் புது ஈமெயில் ஐடி ஒன்றை உருவாக்கினார். அதில், மனைவியின் ஆபாசப் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, அதனுடன் 'என்னுடன் உறவு வைத்துக்கொள்ள இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்' என்று மனைவியின் கைபேசி எண்ணையும் சேர்த்து இன்டர்நெட்டில் பரவ விட்டார்.

இதனை அறிந்த அப்பெண், போலீசில் புகார் அளித்தார். அவரின் புகாரின் பேரில், ஐதராபாத் சைபர் கிரைம் போலீசார் பெங்களூரில் நந்தகுமாரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+