ஜியாகானின் கடைசிக் கடிதம் போலியானதா?: அதிர்ச்சியில் போலீசார்
டெல்லி: சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட நடிகை ஜியாகான் தன் காதலருக்கு கடைசியாக எழுதியதாகக் கூறப்பட்ட ஆறு பக்க கடிதம் பொய்யானதாக இருக்கலாமோ என சந்தேகம் எழுந்துள்ளது.
25 வயதான நடிகை ஜியாகான் சில வாரங்களுக்கு முன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது அகால மரணத்திற்கு திரையுலகமே ஆழ்ந்த சோகத்தில் மூழ்கிய நிலையில் , தற்கொலையின் பிண்ணனியில் காதல் விவகாரம் இருப்பது தெரிய வந்தது.
ஜியாகானின் காதலர் சூரஜ் பன்சோலி ‘தற்கொலைக்கு தூண்டியதாக' கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருக்கிறார். இந்நிலையில், ஜியாகானின் தற்கொலைக்கு முந்தைய கடைசிக் கடிதம் போலியானதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நிசப்தமாக முடிந்த ஜியாவின் வாழ்க்கை...
அமிதாப்புடன் , ராம் கோபால் வர்மா படத்தில் நடித்த ‘நிசப்த்' திரைப்படம் ஜியாகானின் நடிப்புத் திறமையை திரையுலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது. ஜூன் 3ம் தேதி தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஜியாகான், தனது திரையுலகக் கனவுகளை இத்துடன் முடித்துக் கொள்வதாக தன் கடைசிக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஜியாவின் காதல் தோல்வி...
ஜியாகானின் தற்கொலைக்கு பிண்ணனியில் அவரது காதல் தோல்வியால் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் பாலியல் சித்ரவதைகளே இருந்தன என அவரது தாயாரும், சகோதரியும் போலீஸில் புகார் செய்தனர். இதற்கு ஆதாரமாக, ஜியாகான் கடைசியாக எழுதிய கடிதம் என ஆறு பக்க கடிதம் ஒன்றை போலீசில் அவர்கள் ஒப்படைத்தனர்.

சூரஜ் உடனான காதல்...
அக்கடிதம் ஜியாகானின் இல்லத்தில், அவரது தற்கொலைக்குப் பின் கிடைத்ததாக அவர்கள் தெரிவித்திருந்தனர். இதனால், ஜியாகானின் காதலரும், பிரபல நட்சத்திர தம்பதிகளான ஆதித்யா பன்சோலி மற்றும் ஜரீனாவின் மகனான சூரஜ் பன்சோலி கைது செய்யப்பட்டார்.

கடைசிக் கண்ணீர் கடிதம்...
ஜியாகானின் கடைசிக்கடிதம் எனச் சொல்லப்பட்ட ஆறுபக்கக் கடிதத்தில், சூரஞ் உடனான தனது காதல் அதன் மூலம் தான் பட்ட உடல் மற்றும் மன வேதனைகளை விவரித்திருந்தார் ஜியா. சூரஜின் குழந்தையைக் கூட கருக்கலைப்பு செய்ததாக அதில் குறிப்பிட்டிருந்தார்.

சோதனையில் சிக்கிய காதல் கடிதங்கள்...
தனது மகன் மீது தவறொன்றுமில்லை என தொடர்ந்து ஜரீனா கூறி வந்த நிலையில் போலீசார் சூரஜின் வீட்டை சோதனையிட்டனர். அப்போது ஏற்கனவே, ஜியாகான் எழுதிய மேலும் ஐந்து காதல் கடிதங்களை போலீசார் கைப்பற்றினர்.

அது வேற... இது வேற...
ஜியாகானின் கடைசி மற்றும் முந்தைய கடிதங்களை ஒப்பிட்டுப் பார்த்த போலீசார் அதிர்ந்த்து விட்டனர். காரணம் இரண்டிலும் கையெழுத்து மாறுபட்டது தான்.

தடவியல் சோதனைக்குப் பிறகே முடிவு...
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது, ‘முறையான தடயவியல் பரிசோதனைக்குப் பிறகே எங்களால், சரியான முடிவைச் சொல்ல முடியும். ஆனால், பார்ப்பதற்கு ஜியாகானின் கடைசிக் கடிதமான ஆறு பக்கக் கடிதத்திற்கும், சோதனையில் சிக்கிய பழைய காதல் கடிதத்தில் இருக்கும் கையெழுத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது' என தெரிவித்துள்ளார்.

எது உண்மை...?
ஜியாகானின் கடைசி கடிதம் அவரது இல்லத்தில் எடுக்கப்பட்டது. ஆனால், தற்போது கிடைத்திருக்கும் ஐந்து கடிதங்கள் சூரஜ் வீட்டில் கிடைத்தவை. இவற்றில் எவை உண்மையானது, எவை போலியானது என காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications