மன்மோகன் பேச்சு மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்குங்க.. நிதீஷ் குமார்

Subscribe to Oneindia Tamil

Nitish Kumar
பாட்னா: பிரதமர் மன்மோகன் சிங் என்னை மதச்சார்பற்றவர் என்று கூறியிருப்பது மனதுக்கு அமைதி தருகிறது என்று கூறியுள்ளார் பீகார் முதல்வர் நிதீஷ் குமார்.

நேற்றைய அமைச்சரவை மாற்றத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், நிதீஷ் குமார் மதச்சார்பற்ற தலைவர் என்று வர்ணித்திருந்தார். மேலும்அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பரும் இல்லை என்றும் கூறியிருந்தார்.

இந்தப் பேச்சை தற்போது வரவேற்றுள்ளார் நிதீஷ் குமார். இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், என்னை மதச்சார்பற்ற தலைவர் என்று பிரதமர் விளித்திருப்பது மனதுக்கு அமைதி தருகிறது, ஆறுதல் அளிக்கிறது என்றார் அவர்.

நாளை பீகார் சட்டசபையில் தனது பெரும்பான்மை பலத்தை நிதீஷ் குமார் நிரூபிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+