ஜெர்மனியில் விடுதலைப் புலிகள் அமைப்பு தீவிரமாக செயல்படுகிறது: இலங்கை அரசு
கொழும்பு: விடுதலைப் புலிகள் அமைப்பும் இப்பொழுதும் ஜெர்மனியில் செயல்பட்டு வருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் கூறுகையில்,
ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் கிடோ வெஸ்டர்வெல்லை பெர்லினில் அண்மையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினேன். அப்போது ஜெர்மனியில் சமூக அமைப்புகள் என்ற பெயரில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பு தீவிரவமாக செயல்பட்டு வருவதாக இலங்கை அரசுக்கு கிடைத்த தகவல் குறித்து விவாதிக்கப்பட்டது.
தமிழ் இன உணவர்வாளர்களிடம் இருந்து திரட்டப்படும் நிதியை வைத்து ஜெர்மனியில் பல பள்ளிகள் இயங்கி வருகின்றன. அத்தகைய பள்ளிகளில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் நடத்தப்பட்டு வருவது குறித்து ஜெர்மனியிடம் கவலை தெரிவிக்கப்பட்டது.
அது போன்ற பள்ளிகள், தமிழ் சமூக அமைப்புகளின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்குமாறு ஜெர்மனி அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது என்றார்.












Click it and Unblock the Notifications