சென்னை: கோயம்பேடு – பரங்கிமலை இடையே 2014ல் மெட்ரோ ரயில் ஓட தொடங்கும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை யில் 2014ம் ஆண்டு கோயம்பேடு- பரங்கிமலை இடையேயான 11 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

சென்னையில் 5 கட்டமாக மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக சென்னை மெட்ரோ ரயில் இருப்புவழி லிமிட்டெட் என்ற அமைப்பினை நிறுவியுள்ளது.

இந்த திட்டத்திற்காக மெட்ரோ ரெயில்கள் பிரேசில் நாட்டில் உள்ள சாபோலோ நகரில் தயாரிக்கப்பட்டு, மொத்தம் 42 ரெயில்கள் தயாரிக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இதில் 9 ரெயில்கள் பிரேசிலில் தயாரிக்கப்படுகிறது. மீதமுள்ள 33 ரெயில்கள் ஆந்திர மாநிலம் தடா அருகே உள்ள ஸ்ரீசிட்டியில் நிறுவப்பட்டுள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது.

ஒவ்வொரு ரெயிலும் 4 பெட்டிகளை கொண்டதாக இருக்கும். முதல் ரெயில் கடந்த வாரம் கப்பல் மூலம் சென்னை வந்து சேர்ந்தது. இந்த ரெயில் கோயம்பேட்டில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

2-வது ரெயிலும் தயாராகிவிட்டது. அதிகாரிகள் சோதனைக்கு பிறகு கப்பல் மூலம் சென்னை கொண்டு வரப்படும். ஆகஸ்டு மாதம் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் 9 ரெயில்களும் சென்னை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து சென்னை யில் 2014ம் ஆண்டு கோயம்பேடு- பரங்கிமலை இடையேயான 11 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+