கற்பழித்த தந்தையை கழுத்தை அறுத்துக் கொன்ற மகள்: போலீசிடம் ஒப்படைக்க ஊர்மக்கள் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

சிட்னி: பப்புவா நியூசினியா நாட்டில் கற்பழித்த தந்தையை மகள் கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளார். குற்றவாளியான அவரை ஊர் மக்கள் ஆதரித்து வருகின்றனர். அவரை போலீசில் ஒப்படைக்க போலீசார் மறுத்து விட்டனர் குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா அருகே உள்ள நாடு பப்புவா நியூசினியா. இங்குள்ள கிராமம் ஒன்றில் 3 மகள் மற்றும் மனைவியுடன் வசித்து வந்தார் 40 வயது மனிதர் ஒருவர். மனைவி வீட்டில் இல்லாதபோது தனியாக இருக்கும் தனது மகள்களை மாற்றி, மாற்றி கற்பழித்து வந்துள்ளான் அந்த கொடூரத் தந்தை.

சம்பவத்தன்று, வழக்கம் போல மனைவி வெளியே சென்று விட, வீட்டில் தனியாக இருந்த அவரது 18 வயது மகளை அவன் பலாத்காரமாக கற்பழித்துள்ளான். மறுநாள் காலையிலும் மீண்டும் அச்சிருமியை அவன் கற்பழிக்க முயற்சி செய்துள்ளான். தந்தையே தனக்கு இத்தகைய கொடூரத்தை விளைவிப்பதைப் பொறுத்துக் கொள்ள இயலாத அச்சிறுமி, ஆத்திரத்தில் அருகிலிருந்த புதர்களை வெட்ட பயன்படுத்தும் கத்தியால் தனது தந்தையின் கழுத்தை துண்டாக வெட்டியுள்ளாள். இதனால், சம்பவ இடத்திலேயே அவன் பலியானான்.

உடனடியாக, தனது கிராம தலைவர்களிடம் நடந்ததைக் கூறி அப்பெண் கதறி இருக்கிறாள். ஆதலால், அப்பெண்ணிற்கு அவர்கள் அரவணைத்து, காமக் கொடூரத் தந்தையைக் கொன்றது சரிதான் எனக்கூறி ஆதரவு அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து குற்றவாளியைக் கைது செய்ய வந்த போலீசாரிடம் அவர்கள், அப்பெண்ணை ஒப்படைக்க மறுத்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+