வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை காக்க வேண்டும்: கருணாநிதி வேண்டுகோள்

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததன் காரணமாக கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் பெருமழை பெய்து, உத்தரகாண்ட் மாநிலத்தில் மட்டும் இதுவரை 600க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
மத்திய அரசின் சார்பில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரகாண்ட், இமாசலப் பிரதேச முதல்வர்களுக்கு மத்திய அரசின் சார்பில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணத் தொகை ஒதுக்கியிருப்பதாகத் தெரிகிறது.
புனித தலங்களான கேத்ரிநாத், பத்ரிநாத் ஆகிய இடங்களுக்கு கூடுவாஞ்சேரி பகுதியிலிருந்து 52 பேரும், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 37 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்றிருக்கிறார்கள். இவர்கள் சென்ற பாதை திடீரென்று துண்டிக்கப்பட்டதால், வனப் பகுதியிலும், அங்குள்ள கிராமத்திலும் தங்க வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வந்தன.
தரை வழியாக வருவதற்கு அவர்கள் வழியில்லா நிலையில் கெலிகாப்டர் மூலமாக அவர்களைக் காப்பாற்ற வேண்டுமென்று தொலைபேசி வாயிலாக செய்தி கிடைத்துள்ளது. தற்போது தொலைபேசியிலும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் துண்டிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.
இந்தப் பிரச்சினை பற்றி நான் கூறியதன் பேரில் தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு மத்திய உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து பத்ரிநாத் சென்றுள்ள தமிழர்களைப் பாதுகாப்பாக மீட்டுத் தரவேண்டுமென்று வலியுறுத்தியிருக்கிறார்.
சுற்றுலா மேற்கொண்டுள்ள தமிழர்களின் உறவினர்கள் மிகுந்த துயரத்தோடு இருக்கிறார்கள். எனவே மத்திய, மாநில அரசுகள் உடனடியாக துரித முயற்சிகளை மேற்கொண்டு 'கெலிகாப்டர்' மூலமாக அவர் களை மீட்டு, தமிழகத்திற்குப் பத்திரமாக வந்து சேருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications