உருக்குலைந்து போன உத்தரகாண்ட்.. 1000 சாலைகள், 94 பாலங்கள் வெள்ளத்தில் அவுட்
டேராடூன்: வரலாறு காணாத மழை வெள்ளத்தால் உத்தரகாண்ட் மாநிலமே உருக்குலைந்து போயுள்ளது. இதுவரை வெள்ளத்தில் சிக்கி 1100 சாலைகள், 94 பாலங்கள் அடியோடு காணாமல் போய் விட்டன.
இதுவரை இல்லாத மிகப் பெரிய சீரழிவை சந்தித்துள்ளது உத்தரகாண்ட் மாநிலம். பயங்கர வெள்ளம் மற்றும் தொடர் மழையால் மாநிலத்தின் பல பகுதிகள் சீர்குலைந்து கிடக்கின்றன.
இதுவரை வெள்ள மதிப்பு முழுமையாக மதிப்பிட முடியாத நிலையே காணப்படுகிறது.

1100 சாலைகள் சேதம்
இதுவரை 1100 சாலைகள் சேதமடைந்துள்ளன. 94 பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டு விட்டன.

எங்கு பார்த்தாலும் நிலச்சரிவு
மேலும் மாநிலத்தின் பல பகுதிகளில் பெருமளவிலான நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ருத்ரபிரயாக்கில் மட்டும் 26 பாலங்கள் காலி
ருத்ரபிரயாக் பகுதியில் மட்டும் 26 பாலங்கள் சேதமடைந்து போய் விட்டதாம். இதை சரி செய்ய 2 அல்லது 3 ஆண்டுகள் வரை பிடிக்கும் என்கிறார்கள்.

ஜம்மு காஷ்மீர் அரசு தரும் ரூ. 1 கோடி
உத்தரகாண்ட் மாநில அரசுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ. 1 கோடி தருவதாக ஜம்மு காஷ்மீர் மாநில அரசு அறிவித்துள்ளது.

ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்கள்
வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவ உணவுப் பொட்டலங்களையும் தண்ணீரையும் ஹெலிகாப்டர்கள் மூலம் போட ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

பாதிப்பிலிருந்து மீண்டு வர 3 ஆண்டுகளாகும்
வெள்ள பாதிப்பிலிருந்து தங்களது மாநிலம் மீண்டு வர 3 ஆண்டுகள் வரை ஆகும் என்று உத்தரகாண்ட் மாநில அரசு தெரிவித்துள்ளது.

பத்ரிநாத்தில் இன்னும் தவிக்கும் 70,000 பேர்
கேதார்நாத்தில் தற்போது முழுமையாக மீட்புப் பணிகள் முடிந்து விட்டதாம். தற்போது பத்ரிநாத்தில் பாதுகாப்புப் படையினரின் கவனம் திரும்பியுள்ளது. அங்கு இன்னும் 70,000க்கும் மேற்பட்டோர் தவித்து வருகின்றனர்.

ஹெல்ப்லைன் எண்கள்
அவசர உதவிக்கு ஹெல்ப்லைன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை ...
உத்தரகாசி - 01374-226126, 226161, சமோலி - 01372-251437, தேஹ்லி - 01376-233433, ருத்ரபிரயாக் - 01732-1077
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications