சுற்றுச்சூழல் மாசு, போக்குவரத்து நெரிசல்... கதறித் துடிக்கும் குற்றாலம் .. சரி செய்வார்களா?
குற்றாலம்: போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் மாசு என பல்வேறு அவலங்களால் குற்றாலம் அருவிக்கரை பகுதி பெரும் சோகத்துடன் காணப்படுகிறது. இதை சரி செய்ய அதிகாரிகள், போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களும், சுற்றுலாப் பயணிகளும் எதிர்பார்க்கின்றனர்.
குற்றால சீசன் தொடர்ந்து களைகட்டி வரும் நிலையில் கடந்த 3 தினங்களாக அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீர் பலத்த ஓசையை ஏற்படுத்திவரும் நிலையில் கம்பீரமாக விழுந்து வருகிறது.
அருவிக்கரை பகுதிகளில் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடும் குற்றால அருவிகளில் குளித்து மகிழ சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டு வருகிறது.

உற்சாக சீசன்
கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ஏமாற்றத்தை தந்த சீசன் இந்தாண்டு குறிப்பிட்ட நேரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு உற்சாகத்தை தரும் வகையில் காணப்பட்டு வருகிறது.

ஏழைகளின் ஊட்டி
ஏழைகளின் ஊட்டியாக விளங்கும் குற்றால அருவிகளில் விழும் மூலிகை தண்ணீரில் குளித்து மகிழ வெளி மாநிலத்தவர்களும் தற்போது அதிகமாக வரத் துவங்கியுள்ளனர்.

அத்தனை நாட்களிலும் அமோக கூட்டம்
கடந்த சீசன் காலங்களில் எல்லாம் விடுமுறை நாட்களில் தான் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதக் கூடும். ஆனால் நடப்பு சீசனை பொறுத்தவரை அருவிகளில் தண்ணீர் விழத்துவங்கிய நாள் முதல் ஒருசில நாட்களை தவிர மற்ற நாட்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டு வருகிறது.

வாகன நெரிசல்
ஐந்தருவி, குற்றாலம் ,குற்றாலம் - பழையக்குற்றாலம் ஆகிய ரோடுகளில் கடுமையாக வாகனங்கள் ஆங்காங்கே அணிவகுத்து நின்றதுடன் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல்ஏற்பட்டு வருகிறது..

திணறி வரும் குற்றாலம்
குற்றாலத்தில் குவியும் வாகனங்கள்... அதிகரித்து வரும் சுற்றுலா பயணிகள்..கூட்டம் காரணமாக . தொடரும் டிராபிக் ஜாம் ... மத்தியில் குற்றாலம் கடந்த இரண்டு தினங்களாக திணறி வருகிறது.

சுகாதாரக் கேடு மறுபக்கம்
மாற்றுப்பாதைகளை வகுத்து குற்றாலத்தில் ஏற்பட்டுள்ள டிராபிக் ஜாமை முறைப்படுத்திட வேண்டுமென ஒருபுறமும், சுகாதாரக் கேடுகளும்,போதிய பாரமரிப்புக்களும் சாலைகள் குண்டும் குழிகளாகவும், ஆங்காங்கே மழை நீர் தேங்கி சுகாதாரக் கேடுகளை ஏற்படுத்தும் வண்ணமும், பிளாஸ்டிக் கழிவுகளும், அருவி நீர் செல்லும் ஆற்றில் கழிவு துணிகளும்,சாக்கடை,உணவு விடுதிகளின் கழிவுகளும் நிரம்பிக் காணப் படுகிறது.

மெத்தனப் பஞ்சாயத்து
கழிவுகளை அப்புறப்படுத்தாமல் பஞ்சாயத்து நிர்வாகம் மெத்தனப் போக்கை கடைப் பிடித்து வருகிறது.சுற்றுலாத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையம் பூட்டிய நிலையில் காணப்படுகிறது.

பராமரிப்பில்லாத பூங்கா
மெயின்அருவிக்கு செல்லும் சாலையில் உள்ள பூங்கா பாரமரிப்பின்றி பூட்டிய நிலையில் உள்ளது. சிமெண்ட்சாலைகள் பராமரிப்பின்றி ஆங்காங்கே சிதிலம் அடைந்தும் பாத சாரிகளின் பாதத்தை பதம் பார்க்கிறது.

சரக்கு வாங்கி ரோட்டிலேயே குடிக்கும் குடிகாரர்கள்
இப்படி பல குறைகள் அருவி நீரைப் போல் கொட்டிக் கிடக்கிறது. மேலும் மெயின் ரோட்டில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் சரக்கை வாங்கும் குடிமகன்கள் பெண்கள் செல்லும் சாலையில் ஆங்கங்கே தரையில் அமர்ந்து குடித்து கும்மாளம் இட்டு வருவதால் பெங்க அச்சத்தோடு செல்லும் அவலம் உருவாக்கி உள்ளது.

சரத் சொல்லியும் கேட்கலையே..
இங்கு ஆய்வு நடத்திய சட்ட மன்ற உறுப்பினர் சரத்குமார் இது குறித்து அதிகாரிகளை அழைத்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை உடனடியாக சுற்றுலாப் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் அரசை வலியுறுத்தியுள்ளனர்.
சீசனுக்கு மட்டும் 20 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இங்கு நிறைந்துக் காணப்படும் குறைகள் களையப்படுமா...?












Click it and Unblock the Notifications