உத்தர்காண்ட் பெருமழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 550ஆக அதிகரிப்பு! 17 வெளிநாட்டவர் மீட்பு!

உத்தர்காண்ட் உட்பட வடமாநிலங்களில் கனமழை பெய்ததாலும் கேதார்நாத் பனிச்சிகரம் உடைந்து விழுந்ததாலும் கங்கை மற்றும் யமுனை நதிகளில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மேலும் சார் தாம் யாத்திரை சென்ற பல்லாயிரக்கணக்கானோர் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர். பலநூறு சாலைகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. மலைப்பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 25 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இதுவரை நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 550 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்று உத்தர்காண்ட் மாநில அரசு அறிவித்திருக்கிறது. இதனிடையே மீண்டும் மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதால் மீட்புப் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் வெள்ளத்தில் சிக்கிய 17 வெளிநாட்டு பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். இதேபோல் கேதார்நாத் மற்றும் கெளரிகுண்ட் இடையே வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை மீட்கும் நடவடிக்கை விரைவுபடுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 40 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ராஜஸ்தான் மாநில அரசு 2 ஹெலிகாப்டர்களையும் 30 பேருந்துகளையும் மீட்புப் பணிக்கு அனுப்பி வைத்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications